Good News! பிளாட்ஃபார்ம் டிக்கெட் மூலம் ரயிலில் பயணம் செய்யலாம்
பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளை (Platform Ticket) வைத்துக்கொண்டு கூட ஒருவர் ரயில்களில் பயணிக்க முடியும். ஆம் இது உண்மைதான்!! இது குறித்து ரயில்வே விதிகள் என்ன சொல்கின்றன என்பதை பார்க்கலாம். (Photo:wikipedia)
பிளாட்ஃபார்ம் டிக்கெட்டை மட்டுமே வைத்துக்கொண்டு நீங்கள் ரயிலில் ஏறிவிட்டால், அச்சப்படத் தேவையில்லை. நீங்கள் டிக்கெட் சென்று டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். இப்படி ரயில்வேயின் (Indian Railway) ஒரு விதி உள்ளது. (Photo:PTI)
அவசரகாலத்தில், ஒரு பயணி ஒரு பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுடன் ரயிலில் ஏறலாம். ஆனால் அப்படி ஏறியவுடன் அவர் உடனடியாக பயண டிக்கெட் இன்ஸ்பெக்டரை (TTE) தொடர்புக்கொள்ள வேண்டும். (Photo:PTI)
நீங்கள் ரயிலில் பயணிப்பதை யாரும் தடுக்க முடியாது. ஆனால் உங்களிடம் 250 ரூபாய் அபராதம் மற்றும் பயண கட்டணம் வசூலிக்கப்படும். (File Photo)
பிளாட்ஃபார்ம் எந்த ரயில் நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்டதோ, அங்கிருந்து நீங்கள் சென்று சேரும் ரயில் நிலையம் வரை கட்டணத்தை செலுத்த வேண்டும். (Photo:PTI)