Google Pay: கூகுள் பேயில் ரூ.15,000 வரை கடன் பெறலாம்! எப்படி தெரியுமா?

Wed, 06 Dec 2023-11:24 am,

அவசர தேவைகளுக்கு பணம் தேவைப்பட்டால் நண்பர்கள் அல்லது தெரிந்தவர்களிடம் வாங்குவோம்.  இல்லை என்றால் ஆன்லைன் ஆப்ஸ் மூலம் கடன் பெறுவோம்.

 

ஆன்லைன் மூலம் கடன் பெறுவதில் பல மோசடிகளும் நடைபெறுகிறது.  இதனால் பலர் சிக்கல்களுக்கு ஆளாகின்றனர்.  

 

இந்நிலையில், UPI பண பரிவர்த்தனை நிறுவனமான கூகுள் பே டிஜிட்டல் கடன் வழங்கும் புதிய திட்டத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

 

சாஷட் லோன் என கூறப்படும் இதில் அதிகபட்சம் ரூ. 15,000 வரை கடன் பெற்று கொள்ள முடியும்.  இந்த கடனை 12 மாதங்களுக்குள் திரும்பி கட்ட வேண்டும்.  

 

இதற்காக கூகுள் பே நிறுவனம் ஃபெடரெல் வங்கி, கோடக் வங்கி, மஹிந்திரா வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

 

கூகுள் பே ஆப்பை ஓபன் செய்து, லோன் பிரிவில் உங்களுக்கு தேவையான கடன் தொகையை கூறி, விவரங்களை குறிப்பிட்டால் உடனடியாக கடன் வழங்கப்படும். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link