Gram Suraksha Jojana: ரூ.50 முதலீடு செய்து ரூ.35 லட்சம் வரை பெறும் தபால் நிலைய திட்டம்!
அஞ்சலக திட்டங்களில் தற்போது பிரபலமானதாகவும், சிறப்பானதாகவும் கருதப்படுவது கிராம் சுரக்ஷா யோஜ்னா திட்டம் ஆகும்.
போஸ்ட் ஆபிஸ் கிராம் சுரக்ஷா யோஜனா என்பது ஒரு முழு ஆயுள் காப்பீட்டுக் திட்டமாகும், இது ஐந்து வருட பாதுகாப்புக்குப் பிறகு எண்டோமென்ட் அஷ்யூரன்ஸ் பாலிசியாக மாற்றுவதற்கான வாய்ப்பாக உள்ளது.
இதன் மூலம் பாலிசிதாரர் 55, 58 அல்லது 60 வயது வரை குறைக்கப்பட்ட பிரீமியங்களைச் செலுத்துவதன் மூலம் பயனடையலாம். இந்த திட்டத்தில் சேர குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வயது 19 முதல் 55 வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ 10,000 மற்றும் அதிகபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சம் ஆகும். இந்த திட்டத்தில் சேர்ந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கடன் வசதி கிடைக்கும்.
ஒரு பாலிசிதாரர், கிராம சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் வெறும் 50 ரூபாய் பங்களிப்பதன் மூலம் ரூ.35 லட்சம் வரை வருமானம் பெறமுடியும். ஒவ்வொரு மாதமும் ரூ.1,515 பாலிசியில் முதலீடு செய்தால், அதாவது ஒரு நாளைக்கு சுமார் ரூ.50, பாலிசி முதிர்ச்சியடைந்த பிறகு அந்த நபர் ரூ.34.60 லட்சத்தை திரும்பப் பெறுவார்.