அள்ளிக்கொடுப்பார் குரு: குரு வக்ர பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம், வெற்றிகள் குவியும்

Sat, 02 Sep 2023-1:08 pm,

மேஷம்: வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். கோபம், வாக்குவாதம் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும், ஆனால் சில பிரச்சனைகளும் வரக்கூடும்.

ரிஷபம்: நம்பிக்கை முழுமையாக இருக்கும், ஆனால் பேச்சில் சமநிலையை பராமரிக்கவும். கல்விப் பணிகளில் வெற்றி கிடைக்கும். மத பக்தி இருக்கும். பணியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மிதுனம்: மனதில் மகிழ்ச்சி இருக்கும், படிப்பில் ஆர்வம் இருக்கும். கல்விப் பணிகளுக்கு மகிழ்ச்சியான பலன் கிடைக்கும். மரியாதை கிடைக்கும். ஆட்சி நிர்வாகத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

கடகம்: மனம் மகிழ்ச்சியாக இருக்கும், ஆனால் பேச்சு நடத்தையில் நிதானம் தேவை. உத்தியோகத்தில் முன்னேற்ற பாதை அமையும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

சிம்மம்: மனம் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனாலும் தன்னடக்கத்துடன் இருப்பது நல்லது. உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருங்கள். குழந்தை மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிக ஓட்டம் இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இருக்கும்.

கன்னி: பேச்சில் இனிமை இருக்கும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். சுய கட்டுப்பாட்டுடன் இருங்கள். பொறுமையாக இருக்க முயற்சி செய்யுங்கள். வியாபாரம் விரிவடையும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.

துலாம்: நம்பிக்கை மற்றும் ஏமாற்றம் போன்ற உணர்வுகள் மனதில் இருக்கலாம். சுய கட்டுப்பாட்டுடன் இருங்கள். கல்வி மற்றும் அறிவுசார் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். கல்விப் பணிகளில் வெற்றி உண்டாகும். நண்பரின் உதவியைப் பெறலாம்.

விருச்சிகம்: மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். நம்பிக்கையும் நிறைந்திருக்கும். நண்பர்க்ளை சந்திக்க நேரம் கிடைக்கும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. வியாபாரத்தில் உயர்வு இருக்கும்.

தனுசு: தன்னம்பிக்கை குறையும். மனதில் கலக்கம் இருக்கும். அமைதியாய் இருந்தால் நல்லது நடக்கும். தேவையில்லாத கோபம் மற்றும் வாக்குவாதத்தை தவிர்க்கவும். இசையில் நாட்டம் கூடும். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் அமையும்.

மகரம்: மனம் கலங்கும்படியான நிகழ்வுகள் நடக்கலாம். மன அமைதியைப் பேண முயற்சி செய்யுங்கள். குடும்பத்துடன் மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்ல வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் உயர்வு இருக்கும். கடின உழைப்பும் அதிகமாக இருக்கும்.

கும்பம்: நம்பிக்கை நிரம்பியிருக்கும், ஆனால் மனமும் அலைக்கழிக்கப்படும். அமைதியாய் இருந்து பொறுமையை கடைபிடிக்க முயற்சி செய்யுங்கள். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அதிக அலைச்சல் இருக்கும்.

மீனம்: நம்பிக்கை குறையும். மனதில் கலக்கம் இருக்கும். பொறுமையாக இருக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள் தொழில் நிமித்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு உண்டு. இசையில் ஆர்வம் கூடும்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link