சுக்கிரன் வக்ர பெயர்ச்சி: இந்த ராசிக்காரர்களுக்கு அட்டகாசமான நற்பலன்கள்... ராஜவாழ்க்கை அமையும்

Sat, 22 Jul 2023-2:35 pm,

சுக்கிரன்: ஒரு நபரின் வாழ்க்கையில் சுக்கிரன் கிரகம் மிகவும் முக்கியமான கிரகமாக விவரிக்கப்பட்டுள்ளது. சுக்கிரன் இன்பம் மற்றும் ஆடம்பரத்தின் காரணியாகக் கருதப்படுகிறார். 

கிரகங்களின் பெயர்ச்சிகள்: பொதுவாகவே அனைத்து கிரகங்களின் பெயர்ச்சிகளும் வக்ர பெயர்ச்சிகளும் அனைத்து ராசிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். சுக்கிரன் கிரகத்தின் வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். 

ராசிகளில் தாக்கம்: சுக்கிரனின் வக்ர பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனிமும் சில ராசிக்காரர்களுக்கு இதனால் அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

ரிஷபம்: ரிஷப ராசியினருக்கு சுக்கிரனின் வக்ர பெயர்ச்சி நல்ல செய்திகளைத் தரும். அவர்கள் பணியிடத்தில் மிகுந்த மரியாதையை பெறுவார்கள். திடீர் வருமானம் உயரும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்திலும் பெரிய லாபம் கிடைக்கும்.

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு வக்ர நிலையில் சுக்கிடன் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையைத் தருவார். பொருளாதார நிலையும் முன்பை விட சிறப்பாக இருக்கும். நீண்ட பயணம் செல்லக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். இந்த பயணங்களால் ஆனுகூலமான விளைவுகள் ஏற்படும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் முடிவடையும்.

துலாம்: சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் புதிய வேலையை ஆரம்பிக்கலாம். வியாபாரத்தில் பெரிய லாபம் ஏற்படும். அயல்நாட்டுத் தொடர்புகளால் அபரிமிதமான லாபம் உண்டாகும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சமூகத்தில் நற்பெயர் கூடும்.

தனுசு: சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களின் பணத்தட்டுப்பாடு நீங்கும். வாழ்க்கைத்துணையுடன் மகிழ்ச்சியான திருமண வாழ்வு அமையும். கல்வி அல்லது பொறியியல் துறையில் தொடர்புடையவர்கள், விரைவில் சில நல்ல செய்திகளைப் பெறலாம்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link