வீட்டிலேயே செய்யக்கூடிய பாட்டி வைத்தியம்!
சேம்பு கிழங்கை புளியுடன் சேர்த்து சமைத்து அடிக்கடி உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.
குறிப்பு : எந்த நோய்க்கும் அறிகுறிகள் தென்பட்டதும் உடனே மருத்துவரை அணுகுவது தான் சிறந்தது.
கசகசாவை தண்ணீரில் ஊர வைத்து அதை நன்றாக அரைத்து வாரத்திற்கு இரண்டு முறை தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி கருமையாகும்.
புதினா சாறு, துளசி சாறு இரண்டையும் சரிபாதியாக கலந்து தினமும் முகத்தில் தடவி பத்து நிமிடம் ஊரவைத்து பின்பு கழுகினால், முகம் பொலிவு பெறும்.
வெந்தையத்தை நெயில் வருத்து மோரில் கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து குடித்து வந்தால் வயிறு சம்மந்தப்பட்ட உபாதைகள் குணமடையும்.
சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலைக்காய் இவற்றை பொடியாக்கி தேனுடன் கலந்து காலை மற்றும் மாலை சாப்பிட தொண்டை கரகரப்பு முற்றிலுமாக விடுபடும்.