ஒல்லி பெல்லி உடம்பு வேண்டுமா? காலையில் இந்த பச்சை ஜூஸ் குடிச்சா போதும்

Fri, 30 Aug 2024-1:04 pm,

உடல் பருமன் என்பது இந்நாட்களில் பலரை பாடாய் படுத்தும் ஒரு பிரச்சனையாக உள்ளது. இதன் காரணமாக நம் ஆளுமை பாதிக்கப்படுவதுடன் நாம் பல வித உடல் உபாதைகளுக்கும் ஆளாகிறோம். அதுவும் தொப்பை கொழுப்பு அதிகமாகிவிட்டால், அதை குறைப்பது பெரிய சவாலாகவே உள்ளது.

இந்த காலகட்டத்தில் தொப்பை கொழுப்பை குறைப்பது பெரிய சவாலாக மாறிவிட்டது. இதற்காக பலர் பல உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள், ஜிம்மில் மணிக்கணக்கில் செலவிடுகிறார்கள். ஆனால், அனைவருக்கும் அவர்கள் நினைக்கும் வகையில் தொப்பை கொழுப்பும் (Belly Fat) உடல் எடையும் குறைவதில்லை. சில எளிய, இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். 

பச்சை காய்கறிகளில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் ஆகியவை அதிகமாக உள்ளன. இவை தொப்பையை குறைத்து உடல் எடையை குறைக்க உதவுகின்றன. தொப்பையை குறைக்க உதவும் ஆரோக்கியமான பச்சை காய்கறி சாறுகள் பற்றி இங்கே காணலாம். 

கொத்தமல்லியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இது உடலில் இருந்து நச்சுகளை நீக்க உதவுகின்றது. இதுமட்டுமின்றி, கொத்தமல்லி சாறு வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கிறது. இதன் காரணமாக உடல் எடை வேகமாக குறைகிறது. கொத்தமல்லி இலைகளை மிக்ஸியில் அரைத்து, அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். 

கீரையில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவை அதிகமாக உள்ளன. தினமும் கீரை சாறு அல்லது சூப் செய்து குடித்து வந்தால், தொப்பை கொழுப்பு குறைந்து உடல் எடை குறைவதுடன் உடலுக்கு இரும்புச்சத்தும் கிடைக்கிறது. 

 

முட்டைக்கோஸில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி அதிகமாக உள்ளன. இவை தொப்பையை குறைக்க உதவுகின்றன. முட்டைக்கோஸ் சாற்றுடன் சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்துக் குடிக்கலாம்.

பாகற்காயில் பிட்டர் கோர்டோசின் உள்ளது. இது தொப்பை கொழுப்பை குறைக்கவும், உடல் எடையை குறைக்கவும் (Weight Loss) உதவுகிறது. பாகற்காய் சாறில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து குடிக்கலாம். இது எடையை குறைப்பதுடன் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கிறது.

வெள்ளரிக்காயில் அதிக நீர்ச்சத்து மற்றும் குறைந்த கலோரி உள்ளது. இதன் சாறு உங்கள் உடலை நீரேற்றமாக வைத்து தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைக்கவும் உதவுகிறது. வெள்ளரி சாற்றில் எலுமிச்சை மற்றும் புதினா இலைகளை கலந்து பருகலாம். இந்த சாறு உடலில் உள்ள நச்சுகளை நீக்குவதுடன் எடை இழப்பு செயல்முறையையும் துரிதப்படுத்துகிறது.

வெள்ளை பூசணிக்காயில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதில் அதிக நீர்ச்சத்தும் உள்ளது. தினம் காலையில் வெறும் வயிற்றில் பூசணி சாறு குடிப்பதால், செரிமானம் சீராகி, நச்சுகள் வெளியேறி உடல் எடை வேகமாக குறையத் தொடங்கும்.

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link