விந்து தானம் என்றால் என்ன? யாரெல்லாம் செய்யலாம்? வழிமுறைகள் இதோ

Sat, 03 Aug 2024-9:26 pm,

இப்போது ஆண்களிடையே மலட்டுத் தன்மை பிரச்சனை அதிகரித்து வருவதால் அவர்களுக்கு பெற்றோராகும் வாய்ப்பு கிட்டுவதில்லை. இந்த மலட்டுத் தன்மைக்கு வாழ்க்கை முறை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. சிலருக்கு மருத்துவ சிகிச்சைகள் மூலம் குணப்படுத்தலாம் என்றாலும், பெரும்பாலானோருக்கு இந்த சிகிச்சைகளும் பலனளிப்பதில்லை.

 

இத்தகையானவர்களுக்கு பெற்றோர் ஆகும் வாய்ப்பு இல்லாமல் போகிறது. இதற்காகவே மருத்துவ உலகில் இருக்கும் இன்னொரு வாய்ப்பு தான் விந்தணு தானம். இதனைப் பயன்படுத்தி மலட்டுத் தன்மை பிரச்சனையால் அவதிப்படும் தம்பதிகள் பெற்றோராகலாம்.

1884 முதல், அமெரிக்காவில் விந்தணு தானம் நடைமுறையில் இருக்கிறது. குழந்தையின்மைக்கான சிகிச்சையின்போது விந்தணு தரம் குறைவாக இருந்து மலட்டுதன்மை உறுதி செய்யப்பட்டால், அந்த தம்பதியால் கருதரிக்க முடியாது என மருத்துவர்கள் கூறுவார்கள். அந்தநேரத்தில் விந்தணு தானம் பெற்று தங்களின் குழந்தை ஆசையை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

விந்தணு தானம் செய்பவர் உடல் ரீதியாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும், கடுமையான நோய் அல்லது தொற்று நோயால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். பெரும்பாலான விந்தணு வங்கிகள் 18 முதல் 40 வயது வரையிலான ஆண்களிடமிருந்து மட்டுமே விந்தணு தானத்தை ஏற்றுக்கொள்கின்றன. 

இதில் விந்தணுக்களின் எண்ணிக்கை, இயக்கம் மற்றும் அளவு ஆகியவை சாதாரணமாக இருப்பது உறுதி செய்யப்படும். விந்தணு தானம் செய்பவர்களுக்கு சில பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும். குடும்பத்தில் மரபணு சார்ந்த தீவிர நோய்களும் இருக்கக்கூடாது. 

நன்கொடையாளர் அங்கீகரிக்கப்பட்ட விந்தணு வங்கியில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பிறகு, நன்கொடையாளரின் மருத்துவ மற்றும் உளவியல் சோதனை செய்யப்படும். இதில் உடல் பரிசோதனை, இரத்த பரிசோதனை, தொற்று பரிசோதனை, மரபணு சோதனை ஆகியவை அடங்கும். 

நன்கொடையாளரின் சோதனைகள் இயல்பானதாக இருந்தால், அவரிடமிருந்து விந்தணு மாதிரி எடுக்கப்படுகிறது. விந்தணுவின் தரத்தை மதிப்பிட ஆய்வகத்தில் மாதிரி சோதனை செய்யப்படுகிறது. 

 

விந்தணு நன்கொடையாளரின் உடல் பண்புகள், கல்வி, தொழில் போன்றவற்றைப் பற்றிய தகவல்கள் ரகசிய புரொபைலில் பதிவு செய்யப்படும். இதனையடுத்து விந்தணு பரிசோதனை மையத்தில் உறைய வைக்கப்படும்.

விந்தணு தானம் செய்பவர்கள் குழந்தையை பார்க்க உரிமை உண்டு என்ற தகவல் இருக்கும் நிலையில், அது உண்மையில்லை. விந்தணு தானம் செய்தவர் குழந்தையை சந்திக்கவோ அவர்களைப் பற்றிய தகவல் பெறவோ உரிமை இல்லை. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link