உங்க ராசி இதுவா? குருவின் வக்ரப் பெயர்ச்சியால் 118 நாட்களுக்கு ஹை அலர்ட் காலம்: உஷார் மக்களே!
நேற்று, அதாவது அக்டோபர் ஒன்பதாம் தேதியன்று குரு பகவான் ரிஷப ராசியில் வக்ரகதிக்கு சென்றார். அதாவது அவர் தன்னுடைய வழக்கமான பாதையில் இயங்கமாட்டார்.
ஜோதிட ரீதியில் இது மிகப்பெரிய நிகழ்வாகும். குரு பார்க்க கோடி நன்மை என்று சொல்ல கேட்டிருப்போம், அதே போல், குரு வக்கரித்தால் அதை யாராலும் சரி செய்ய முடியாது என்பதையும் கேட்டிருக்கலாம்
ஆனால், சுய ஜாதகத்தில் லக்னாதிபதி வலுத்திருப்பவர்களுக்கு குருவின் வக்ரப் பெயர்ச்சியால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது.
இருந்தாலும், குருவின் வக்ர இயக்கத்தால் கஷ்டப்பட்டு நஷ்டப்படப்போகும் ராசிகள் எவை என்பதை தெரிந்துக் கொள்வோம்
மகர ராசிக்காரர்களுக்கு குருவின் வக்ரகதி இயக்கம் எதிர்மறையாக உள்ளது. பணம் சம்பாதிக்கும் முயற்சிகள் எதிர்பார்த்த வெற்றியைத் தராது. பணியிடத்தில் சக பணியாளர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். தொழிலில் ஈடுபட்டவர்கள் சவால்களை சந்திக்க வேண்டி வரும். மகிழ்ச்சி குறையும்.
கன்னி ராசிக்காரர்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். வருமானம் குறைவதும் செலவுகள் அதிகரிப்பதும் கவலைகளை அதிகரித்துவிடும். தொழில் செய்பவர்கள், பிரச்சனைகளையும் நஷ்டங்களையும் சந்திக்க நேரிடும். டென்ஷன் இருக்கும். வாழ்க்கையில் அவநம்பிக்கை அதிகரிக்கும்.
செய்த முதலீட்டில் லாபம் கிடைக்காது. வேலையில் டென்ஷனும், வியாபாரத்தில் நஷ்டமும் ஏற்பட வாய்ப்பு உண்டு. சக ஊழியர்களுடனான தகராறுகள் மனதில் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்
மேஷ ராசிக்காரர்களுக்கு குருவின் வக்ரகதி இயக்கம், அசுப பலன்களைத் தரும். நிதி சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வருமானம் குறைவதால் கடன் வாங்கவேண்டியிருக்லாம். பேச்சைக் கட்டுப்படுத்துவது நல்லது. உத்தியோகத்தில் ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம்
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது