குரு பெயர்ச்சி 2023: இந்த ராசிகளுக்கு அதிரடி வெற்றி, வேலையில் ப்ரொமோஷன், ஊதிய உயர்வு!
மேஷ ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி சாதகமாக இருக்கும். இந்த நேரம் அலுவலக பணியில் இருப்பவர்க்ளுக்கு நல்லதாக கருதப்படுகின்றது. உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். முன்னேற்றத்திற்கான அனைத்து வழிகளும் திறக்கப்படும்.
மிதுன ராசிக்காரர்களுக்கு பண பலன்கள் கிடைக்கும். உயர் பதவி கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். எந்தவொரு முதலீட்டுத் திட்டமும் வெற்றிகரமாக இருக்கும். பெரிய சேமிப்புகளைச் செய்ய முடியும்.
கடக ராசிக்காரர்களுக்கு குருவின் சஞ்சாரம் சுப பலன்களைத் தரும். அனைத்து வேலைகளிலும் வெற்றி பெறுவீர்கள். பொருளாதார நிலை முன்பை விட வலுவாக இருக்கும். பண ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இவர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் குரு பெயர்ச்சி சாதகமான பலன்களை அள்ளித் தரும். இது சொந்த தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல நேரமாக இருக்கும். பொருளாதார நிலை முன்பை விட வலுவாக இருக்கும்.
குரு பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும். பதவி - கௌரவம் அதிகரிக்கும். மக்கள் உங்களை அதிகமாக மதிப்பார்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல காலம் அமையும்.
துலாம் ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் வெற்றி பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மரியாதை கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு. நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் தற்போது மீண்டும் கிடைக்கும்.
மீன ராசிக்காரர்களுக்கு நீண்டகாலமாக எதிர்பார்த்த நல்ல வேலை கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். தொழிலுக்கு இது நல்ல நேரம்.