கூந்தல் உதிரும் பிரச்சனையா? இந்த 4 வீட்டு வைத்தியங்கள் உதவும்
வெந்தயம் முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால், முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது.
முடி உதிர்தல் பிரச்சனையைத் தடுப்பதில் நெல்லிக்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இது முடி வளர்ச்சியை ஊக்குவிப்பது மட்டுமின்றி முடியை பலப்படுத்துகிறது.
கற்றாழை இலைகளை நடுவில் இருந்து வெட்டி அதன் கூழை நீக்கவும். இப்போது அந்த கூழை முடியின் வேர்களில் தடவி மசாஜ் செய்யவும். சுமார் அரை மணி நேரம் கழித்து தண்ணீரில் கழுவவும். சில நாட்களில் முடி உதிர்வு நீங்கும். முடி உதிர்வைக் கட்டுப்படுத்தவும் கற்றாழை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வெங்காயத்தை அரைத்து சாறு எடுக்கவும். முடியின் வேர்களில் தடவி மசாஜ் செய்யவும். சுமார் அரை மணி நேரம் கழித்து தண்ணீர் கொண்டு கழுவவும். இவ்வாறு செய்வதன் மூலம் நிவாரணம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தத் தகவலின் துல்லியம், காலக்கெடு மற்றும் உண்மையான தன்மையை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும், இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. எங்களின் நோக்கம் உங்களுக்கு தகவல்களை வழங்குவது மட்டுமே.)