முடிக்கு ஷாம்பு பயன்படுத்தும் முன்பு இந்த தவுறுகளை செய்ய வேண்டாம்!
தற்போது பலருக்கும் முடி கொட்டும் பிரச்சனை இருந்து வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. முறையான உணவுகளை எடுத்து கொள்ளாதது முதல், சரியான முடி பராமரிப்பு இல்லாதது வரை நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது.
முடி பராமரிப்பில் பார்க்க வேண்டிய முதல் விஷயம் சரியான ஷாம்பூவை தேர்வு செய்வது ஆகும். கடுமையான வேதி பொருட்கள் சேர்க்கப்பட்ட ஷாம்புக்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
இவை பொடுகு தொல்லையை ஆரம்பத்தில் சரி செய்தாலும், பின்னாலில் உச்சந்தலையில் எரிச்சலை ஏற்படுத்தும். எனவே இதனை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
சிலர் தலையில் உள்ள அழுக்குகளை நீக்க தினசரி ஷாம்பூவை பயன்படுத்துகின்றனர். இதனால் தலையில் உள்ள இயற்கைய எண்ணையும் வெளியேறி வறட்சி ஏற்படுகிறது.
எனவே வாரத்திற்கு 2 அல்லது 3 முறை ஷாம்பு பயன்படுத்துவது நல்லது. இதன் மூலம் தலையில் உள்ள இயற்கையான எண்ணெய் அளவை பராமரிக்க முடியும். அதே போல ஷாம்பூவை அதிகம் தேய்க்காமல் மெதுவாக மசாஜ் செய்வது நல்லது.
ஷாம்பூ பயன்படுத்திய பிறகு முடிக்கு கண்டிஷனர் பயன்படுத்துவது கூடுதல் பளபளப்பை தருகிறது. ஷாம்பூவைப் போலல்லாமல், கண்டிஷனரை முடியின் நடுப்பகுதி மற்றும் முனைகளில் பயன்படுத்த வேண்டும்.