முடி உதிர்வால் அவதிப்படுகிறீர்களா? இனி இதை பாலோ பண்ணுங்க!
பால், தயிர் போன்ற பால் பொருட்களிலும், முட்டையிலும் அதிகளவு புரதசத்து நிரம்பியுள்ளது, மேலும் இதிலுள்ள இரும்புசத்து, வைட்டமின் பி-12, கொழுப்பு அமிலங்கள், புரதங்கள் தலைமுடியின் வேர்களை வலுவாக்குகிறது. முடி உதிர்வால் அவதிப்படுபவர்கள் இதனை தினமும் சாப்பிட வேண்டும்.
பருப்பு வகைகளில் புரதசத்து அதிகளவில் உள்ளது, இதில் ஜின்க், நார்சத்து, இரும்புசத்து, போலிக் அமிலம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. போலிக் அமிலம் முடி உடைதலை தடுக்கிறது, அதனால் தினசரி உணவில் பருப்பு வகைகளை சேர்த்துக்கொள்வது நல்லது.
புரதசத்து தேவைப்படுபவர்களுக்கு சோயா சிறந்த புரத மூலமாக செயல்படுகிறது. புரதசத்து மிகுந்த இந்த சோயாவில் மேலும் ஜின்க், இரும்புசத்து, ஃபோலேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன, இவை உங்கள் முடி உதிர்வுக்கு தீர்வளிக்கிறது.
இறைச்சியில் அதிக புரதசத்து உள்ளது, தினமும் இறைச்சியை சாப்பிடுவதால் முடி வளர்ச்சிக்கு தேவையான ஆரோக்கியமும், முடியின் வேர்களுக்கு தேவையான வலிமையையும் கிடைக்கிறது.