கடவுளின் கைக்கே திரும்பிச் சென்ற `Hand of God` Maradona, in pics
தனது தொழில்வாழ்க்கையில் கால்பாந்து கிளப்பில் இருந்த காலத்தில் மரடோனா அர்ஜென்டினா ஜூனியர்ஸ், போகா ஜூனியர்ஸ், பார்சிலோனா, சீவில்லா, நியூவெல்ஸ் ஒல்ட் பாய்ஸ் மற்றும் நப்போலி போன்ற மன்ற அணிகளுக்காக விளையாடியவர். மிகப் பெரிய ஒப்பந்தத் தொகை பெற்றவர் என்ற சாதனையையும் படைத்தவர் மரடோனா.
சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் அர்ஜென்டினா அணிக்காக விளையாடி, 91 வெற்றிகளை பதிவு செய்துள்ளார் மரடோனா.
நான்கு ஃபிஃபா உலக கோப்பை போட்டிகளில் விளையாடிய மரடோனா, போட்டியில் சிறப்பாக விளையாடியதற்காக தங்கப் பந்து விருதையும் பெற்றவர்.
இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் அபராதம் விதிக்கப்படாத முறையில் மரடோனா முதலில் அடித்த கோல் 'Hand of God' என்று பிரபலமானது.
இங்கிலாந்தின் ஆறு வீரர்களை தாண்டி 60-மீட்டர் தொலைவிலிருந்து அடிக்கப்பட்ட இரண்டாவது கோல், அனைவராலும் பாராட்டப்பட்டு, இந்த "நூற்றாண்டின் சிறந்த கோல்" என்று நம்பப்படுகிறது.
விளையாட்டு வீரர்களில் சர்ச்சைகளில் அதிகமாக சிக்கிக் கொள்ளும் நபர் என்றும் செய்திகளில் அதிகமாக பேசப்பட்ட மரடோனா, இத்தாலியில் நடைபெற்ற போதைப் பொருள் சோதனையில் கோக்கைன் போதைப் பொருள் பயன்படுத்தியது கண்டறியப்பட்டதால் 1991 ஆம் ஆண்டில் கால்பந்து விளையாட்டிலிருந்து 15 மாதங்கள் தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
அமெரிக்க ஒன்றியத்தில் 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின்போது எபெட்ரின் என்ற தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தியதால் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
1997 ஆம் ஆண்டில் கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, கொக்கைன் தவறாக பயன்படுத்தியதன் விளைவாக மோசமான உடல்நிலை மற்றும் அதிகப்படியான உடல் எடையினால் பாதிக்கப்பட்டார்.
கொக்கைன் பழக்கத்திலிருந்து விடுபட்ட பிறகு அர்ஜென்டினாவின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக மிகவும் பிரபலமானார் மரடோனா.
தனது சுயசரிதையான "I am The Diego" புத்தகத்தை 2000வது ஆண்டில் வெளியிட்டார் மரடோனா. இது அர்ஜெண்டினாவில் மிகவும் அதிக விற்பனையான புத்தகம் என்ற சாதனையை படைத்தது. இரண்டாண்டுகளுக்கு ப்பின்னர் புத்தகத்தில் இருந்து கிடைக்கும் வருவாயை இரு அமைப்புகளுக்கு நன்கொடையாக தாரை வார்த்துக் கொடுத்தார் மரடோனா The Diego...
நேப்போலி அணியில் இருந்த போது மரடோனா புகழின் உச்சத்தை அடைந்தார்
கொல்கத்தாவுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் வந்து நிதி திரட்டும் விளையாட்டுப் போட்டியில் கலந்துக் கொண்டார் மரடோனா. அப்போது அவரை இந்திய கால்பந்து ரசிகர்கள் ஆரவாரத்துடன் மகிழ்ச்சியாக வரவேற்றனர். இந்திய பயணம் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக சிலாகித்தார் கால்பந்து உலகின் முடிசூடிய மன்னன் 'Hand of God' Maradona...