சனி வக்ர பெயர்ச்சி... ‘இந்த’ ராசிகளுக்கு நவம்பர் வரை அமோக வாழ்க்கை..!!
சனி பகவான் ஜூன் 29 நள்ளிரவில் வக்ர பெயர்ச்சி அடையும் நிலையில், மற்றும் நவம்பர் வரை இந்த நிலையில் நீடிப்பார். இதனால் மேஷம், ரிஷபம், சிம்மம் உள்ளிட்ட 5 ராசிக்காரர்களுக்கு வரும் காலம் மிகவும் அதிர்ஷ்டம் நிறைந்த காலமாக இருக்கப் போகிறது.
சனி வக்ர பெயர்ச்சி: சனி பகவான் கும்ப ராசியில் ஜூன் 29ம் தேதி நள்ளிரவு 12:29 மணிக்கு வக்ர நிலையை அடைகிறார். நவம்பர் 15, 2024 வரை சனி கும்பத்தில் வக்ர நிலையில் நீடிபபர் சனியின் வக்ர சஞ்சாரத்தால் எந்த 5 ராசிக்காரர்களின் வாழ்க்கை அமோகமாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
மேஷ ராசி: சனிபகவான் உங்களுக்கு நல்ல நிதி நன்மைகளைத் தருவதோடு, உங்கள் சகோதர சகோதரிகளிடமிருந்தும் உங்களுக்கு முழு ஆதரவையும் தருவார். சமூகத்தில் உங்கள் நற்பெயர் உயரும். உங்களின், வேலையில் தொழிலில் முன்னேற்றம் காண நண்பர்கள் உதவுவார்கள். சனி உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவார்.
ரிஷபம் ராசி: வரும் காலம் ரிஷப ராசியினருக்கும் மிகவும் சாதகமாக இருக்கும். அலுபலக பணிகளில் சிறப்பான வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. உத்தியோகஸ்தர்கள் பெரிய பொறுப்புகளை பெறலாம். சமூகத்தில் உங்கள் வித்தியாசமான நண்பர்கள் வட்டம் அதிகரிக்கும். பெரிய வெற்றிகளைப் பெறலாம், இது முன்பை விட உங்கள் வருமானத்தை அதிகரிக்கும்.
சிம்ம ராசி: வேலையில், தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. இது மட்டுமல்லாமல், உங்கள் தொழில் மற்றும் நிதி வாழ்க்கையிலும் பெரிய வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தடைப்பட்ட வேலை அல்லது திட்டங்களை மீண்டும் தொடங்க உதவியாக இருக்கும். திருமண வாழ்வில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். கைக்கு வராமல், சிக்கிய பணத்தை நீங்கள் திரும்பப் பெறுவீர்கள்.
தனுசு ராசி: சனி வக்ர பெயர்ச்சியினால் தங்கள் தொழிலில் விரைவான வெற்றியைப் பெறத் தொடங்குவார்கள். பணியிடத்தில் சக ஊழியர்களால் முழு ஆதாயமும் வெற்றியும் பெறுவீர்கள். உங்கள் வேலையில் உங்கள் பிடி வலுவடையும். அதனால் உங்களின் புகழ் உயரும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு அதிர்ஷ்டம் முழுமையாக கை கொடுக்கும். மேலும், உங்கள் கடின உழைப்பின் முழு பலனையும் பெறுவீர்கள்.
மகர ராசி: சனி வக்ர பெயர்ச்சியினால் உங்கள் நிதி நிலை முன்பை விட மிகவும் வலுவாக இருக்கும். புதிய சொத்து வாங்க நேரம் மிகவும் சாதகமாக இருக்கும். உங்கள் குடும்பத்தின் சுகபோகங்களை முழுமையாக அனுபவிப்பீர்கள். சனியின் வக்ர நிலை காதல் உறவுகளுக்கும் சாதகமாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் உயர்ந்த மரியாதை கிடைக்கும். இது தவிர, நீங்கள் மிக எளிதாக மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.