PSU ஊழியர்களுக்கு நல்ல செய்தி: டி.ஏ-ஹைக் பற்றிய அரசின் அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி

Mon, 16 Aug 2021-5:05 pm,

பொதுத்துறை ஊழியர்களின் அகவிலைப்படி ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் 2021 க்கு அதிகரிக்கப்பட்டது. அதாவது, இந்த அதிகரிப்பு மூன்று மாதங்களுக்கு மட்டுமே பொருந்தும். இது AIACPI (அகில இந்திய சராசரி நுகர்வோர் விலைக் குறியீடு) தரவின் அடிப்படையில் சரி செய்யப்பட்டது.

இதன் கணக்கீடு பின்வருமாறு: அகவிலைப்படி சந்தவிகிதம்= (கடந்த 3 மாதங்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டின் சராசரி (அடிப்படை ஆண்டு 2001 = 100) -126.33) x100

இந்திய வங்கிகள் சங்கத்தின் (ஐபிஏ) உத்தரவின்படி, மே, ஜூன் மற்றும் ஜூலை 2021 க்கான டிஏ எண்ணிக்கை 367 ஸ்லாபாக இருந்தது. ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை இது 30 ஸ்லாப்கள் அதிகரித்துள்ளது. இந்த அடிப்படையில், இப்போது பொதுத்துறை ஊழியர்களின் டிஏ 2.10 சதவீதம் அதிகரித்து 27.79 சதவீதமாக உள்ளது. இது முன்பு 25.69 சதவீதமாக இருந்தது. ஆகஸ்ட் மாதத்திற்கான சம்பளத்தில் இந்த அதிகரித்த அகவிலைப்படி சேர்க்கப்படும்.

ஒவ்வொரு பிரிவின் சம்பளத்திற்கு ஏற்ப அகவிலைப்படி அதிகரிப்பின் பலன் கிடைக்கும். உதாரணமாக, வங்கி PO (Probationary Officer)-வின் சம்பளம் மாதத்திற்கு 40 முதல் 42 ஆயிரம் ரூபாய் இருக்கும். இதில் அடிப்படை ஊதியம் ரூ .27,620. இதில் டிஏ 2.10 சதவீதம் அதிகரித்துள்ளது. PO க்கான சேவை வரலாற்றின் விதிகளின்படி, முழு பணிக்காலத்தின் போது, ஊழியர்களுக்கு 4 அதிகரிப்புகள் வழங்கப்படுகின்றன. பதவி உயர்வுக்குப் பிறகு அதிகபட்ச அடிப்படை சம்பளம் ரூ 42020 ஆக இருக்கும்.

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த அறிவிப்பு வந்தவுடன் ஊழியர்களுக்கு 17% க்கு பதிலாக 28% அகவிலைப்படி கிடைக்கிறது. 1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இப்போது ஜூன் 2021 க்கான அகவிலைப்படி அதிகரிப்புக்காக காத்திருக்கிறார்கள். இது 3% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம், ஊழியர்களின் அகவிலைப்படி 28 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக அதிகரிக்கும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link