ஹர்திக் பாண்டியாவை போல்... விவாகரத்து வாங்கிய முன்னணி இந்திய கிரிக்கெட் வீரர்கள் - யார் யார்?

Fri, 19 Jul 2024-9:05 am,

ஹர்திக் பாண்டியா: இவர் நடாஷா ஸ்டான்கோவிக் பிரிந்து வாழ்வதாக கடந்த சில மாதங்களாகவே பேச்சுக்கள் அடிப்பட்டன. இந்நிலையில், இந்த ஜோடி தாங்கள் திருமண உறவில் இருந்து பிரிந்துவிட்டதாக நேற்று அவர்களின் சமூக வலைதளப் பக்கங்களின் மூலம் அறிவித்தது. மகன் அகஸ்தியாவை இருவரும் பார்த்துக்கொள்வோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

 

தினேஷ் கார்த்திக்: இவர் முதலில் அவரது நீண்டகால தோழியான நிகிதா வஞ்சரா என்பவரை 2007ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அதன்பின்னர் நிகிதாவுக்கும், சக இந்திய வீரர் முரளி விஜய்க்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக பேச்சுக்கள் இருந்த சூழலில், 2012ஆம் ஆண்டில் தினேஷ் கார்த்திக் - நிகிதா இடையே விவாகரத்தானது. 2015இல் ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகலை தினேஷ் கார்த்திக் திருமணம் செய்துகொண்டார். 2021இல் இந்த ஜோடிக்கு கபீர் பல்லிகல் கார்த்திக், ஸியான் பல்லிகல் கார்த்திக் ஆகிய இரட்டை மகன்கள் பிறந்தனர். 2012ஆம் ஆண்டில் முரளி விஜய் - நிகிதா வஞ்சரா ஆகியோருக்கு திருமணம் ஆனது குறிப்பிடத்தக்கது. 

 

ஷிகர் தவாண்: இந்திய அணியின் முன்னாள் ஓப்பனர் தவாண், மனைவி ஆயீஷா முகர்ஜியை பேஸ்புக்கில் சந்தித்தார். இவருக்கும் இடையே காதல் மலர்ந்து 2012ஆம் ஆண்டில் திருமணமும் நடநந்தது. ஆயீஷாவுக்கு ஏற்கெனவே திருமணமாகியிருந்தது, அவருக்கு முதல் கணவருடன் இரண்டு மகள்களும் இருந்தனர். ஷிகர் தவாண் - ஆயீஷா ஜோடிக்கு ஜோரவர் என்ற மகன் இருக்கிறார். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆயீஷா ஆஸ்திரேலியாவிலேயே மகன் ஜோரவர் உடன் தங்கிவிட்டார். ஷிகர் தவாண் குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்ந்து வரும் சூழலில், ஷிகர் தவாண் அவரது மனைவிக்கு மன ரீதியான கொடுமைகளை இழைத்ததாகக் கூறி 2023ஆம் ஆண்டில் இந்த ஜோடிக்கு டெல்லி உயர் நீதிமன்றம் விவாகரத்து கொடுத்தது. 

 

முகமது ஷமி: இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் முகமது ஷமி மீது 2018இல் ஹசின் ஜஹான் குடும்ப வன்முறை புகார் ஒன்றை அளித்தார். இதில் ஷமி மீது வழக்குப்பதிவான நிலையில், மனைவியின் இந்த குற்றச்சாட்டுக்கு அவர் தொடர்ந்து மறுப்பு தெரிவித்தும் வருகிறார். 2018இல் இருந்து இந்த ஜோடி பிரிந்து வாழ்ந்து வருகிறது. இவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார். 

 

ரவி சாஸ்திரி: இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் தலைமை பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி ரிது சிங் என்ற மருத்துவரை திருமணம் செய்துள்ளார், அவர் பாரம்பரிய நடன கலைஞராகவும் இருந்துள்ளார். இந்த ஜோடிக்கு 1992ஆம் ஆண்டு திருமணமான நிலையில், சுமார் 22 ஆண்டுகள் திருமண வாழ்வுக்கு பின்னர் 2012இல் விவாகரத்து ஆனது. இவருக்கும் அலேகா சாஸ்திரி என்ற மகள் உள்ளார். ரவி சாஸ்திரி அதன்பின்னர் திருமணம் செய்துகொள்ளவில்லை. 

 

முகமது அசாருதீன்: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் நவ்ரீன் என்பவரை முதலில் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அஸாதுதீன் மற்றும் அயாசுதீன் என இரண்டு மகன்கள் இருந்தனர். இந்த ஜோடிக்கு 1996ஆம் ஆண்டு விவாகரத்து ஆனது. அதன் பின் பாலிவுட் நடிகை சங்கீதா பிஜ்லானி என்பவருடன் திருமணமாகி, 14 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஜோடிக்கும் விவாகரத்து ஆனது. அதன்பின் அசாருதீன் திருமணம் செய்துகொள்ளவில்லை.

 

மனோஜ் பிரபாகர்: இந்திய அணியின் மூத்த வீரர் மனோஜ் பிரபாகருக்கும் அவரது முதல் மனைவி சந்தியாவுக்கு இடையே 2013ஆம் ஆண்டில் விவாகரத்து ஆனது. அவர் மீது முதல் மனைவி சந்தியா வரதட்சனை மற்றும் வன்கொடுமை குற்றச்சாட்டை முன்வைத்தார். இவருக்கும் ஒரு மகன் இருந்தார். அதன்பின் மனோஜ் பிரபாகர் நடிகை ஃபர்கீன் என்பவருடன் திருமணம் செய்துகொண்டார். 

 

வினோத் காம்ப்ளி: இந்திய அணியின் மூத்த வீரர் வினோத் காம்ப்ளி அவரது நீண்ட கால தோழி நோயெல்லா லூயிஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். 2005இல் இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர். அதன்பின், மாடல் ஆண்ட்ரியா ஹெவிட் என்பவரை திருமணம் செய்துகொண்ட காம்ப்ளி, அப்போது கிறிஸ்துவ மதம் தழுவினார். இந்த ஜோடிக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link