குழந்தைகளின் எதிர்கால ஆரோக்கியத்தை உறுதிபடுத்தும் வைட்டமின் பி12 நிறைந்த பழங்கள்!
ஆரோக்கியமாக வாழ வேண்டுமானால், உடல் ஆரோக்கியத்தை பேண வேண்டும். அதிலும், குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு அவர்களுக்கு தேவை
பெற்றோர்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கும்போது, ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் அனைத்தையும் கொடுக்கிறார்கள். ஆனால், சமைக்காமல் அப்படியே கொடுக்கப்படும் பழங்களுக்கு தனித்தனி ஊட்டச்சத்து உள்ளடக்கம் உண்டு. அதில், வைட்டமின் பி12 கொண்ட பழங்கள் முக்கியத்தும் பெறுகின்றன
ஆரோக்கியமான உணவை தவிர்ப்பது குழந்தையின் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை புரிந்துக் கொண்டு இன்றைய இளம் பெற்றோர் உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கின்றனர். வைட்டமின் பி12 குழந்தைகளின் உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு மிக முக்கியமான உறுப்பு. ஒரு குழந்தைக்கு வைட்டமின் பி 12 குறைபாடு ஏற்பட்டால், மூளை பாதிப்பு, நரம்பு பாதிப்பு மற்றும் பல கடுமையான நோய்கள் ஏற்படலாம். எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் உணவில் வைட்டமின் பி12 உள்ள பொருட்களைச் சேர்த்துக் கொள்வது அவசியம்.
வைட்டமின்கள் மற்றும் பல தாதுக்களின் நல்ல மூலமான வாழைப்பழம், எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு அவசியம் கொடுக்கப்பட வேண்டியது. உடனடி எடை அதிகரிப்புக்கு பயனுள்ளதாக இருக்கும் வாழைப்பழம், வைட்டமின் பி 12 இன் மிகச் சிறந்த மூலமாகும்.
ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ள கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி12 நிறைந்துள்ளது. இது இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்துவதால், நீரிழிவு அபாயத்தையும் குறைக்கிறது.
வைட்டமின் சி இன் சிறந்த மூலமான ஆரஞ்சு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சளி, இருமல் போன்ற பிரச்சனைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கிறது. வைட்டமின் பி12 நிறைந்த ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் கால்சியம் குழந்தைகளின் வளர்ச்சிக்கும், எலும்புகளை வலுப்படுத்தவும் உதவுகின்றன
வைட்டமின் பி12 மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றின் சிறந்த மூலமான ஆப்பிள், குழந்தைகளுக்கு அவசியமான சத்துக்கள் அனைத்தும் நிறைந்தது. குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆப்பிள் பழத்தை தினமும் ஒன்று சாப்பிடும் குழந்தை நோய்வாய்ப்படும் வாய்ப்புகள் குறைகிறது
வைட்டமின் பி 12 இன் சிறந்த ஆதாரமான இந்த பழங்களை குழந்தைகளுக்கு தவறாமல் கொடுத்து வந்தால், மூளை மற்றும் உடல் வளர்ச்சி மேம்படும்.