Heart Alert: நெஞ்செரிச்சல் என்பது வாயு பிரச்சனை மட்டுமல்ல; எச்சரிக்கும் நிபுணர்கள்
உலகம் முழுவதும் உள்ள சுகாதார நிபுணர்கள் நெஞ்செரிச்சலை சாதாரணமாக எண்ண வேண்டாம் என எச்சரிக்கின்றனர். மற்ற அறிகுறிகளைப் போலவே, பெப்டிக் அல்சரால் பாதிக்கப்படுபவர்களுக்கும் மார்பு வலி இருக்கும். நெஞ்செரிச்சல் மற்றும் இரைப்பை புண் அறிகுறிகள் மிகவும் ஒத்தவை. மேலும் இதய நோய்களுக்கான அறிகுறியாகவும் இருக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, வாந்தி, நெஞ்செரிச்சல், வலி மற்றும் மலம் கழிக்கையில் இரத்தப்போக்கு ஆகியவை இருந்தால் மருத்துவரை உடனடியாக அணுகவும்.
மார்பில் ஏற்படும் அழற்சி அல்லது வலி குடலிறக்கத்தின் அறிகுறியாகும். பொதுவாக இந்த பிரச்சனை 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும் என்ற நிலையில் நெஞ்சு எரிச்சல் அடிக்கடி இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
போதிய விழிப்பூனர்வு இல்லாததால் மாரடைப்பு அபாயத்தை தடுக்க இயலாமல் போய் விடுகிறது. மேலும் விழிப்புணர்வு இல்லாததால் அதை புறக்கணிக்கிறோம், இது ஆபத்தானது. நெஞ்செரிச்சலும் மார்பு வலி மற்றும் மாரடைப்புக்கான அறிகுறிகள் ஆகும். எனவே எச்சரிக்கை தேவை
சில நேரங்களில் தொண்டை அல்லது குடல் புற்றுநோயால் நெஞ்செரிச்சல் ஏற்படலாம். இது சரியான நேரத்தில் கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், உயிருக்கே ஆபத்து ஏற்படும்.
நெஞ்செரிச்சல் புற்றுநோய் மற்றும் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும் என ஆய்வு ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது.