மிதமிஞ்சிய உப்பு உயிருக்கே ஆபத்து; எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்
சர்க்கரை நோயை பற்றியும், அதிக அளவிலான சர்க்கரை கேடு என்பதை மட்டுமே அடிக்கடி குறிப்பிடும் பலருக்கு சத்தமில்லாமல் உயிரைகொல்லும் உப்பின் ஆபத்து குறித்து தெரிவதில்லை.
உப்பில் இருக்கும் ரசாயன பொருள்கள் உடலில் நீர்ச்சத்து, இரத்தத்தின் அளவு குறையாமல் இருக்கவும், இதயம் சீராக செயல்படவும் மிகவும் அத்தியாவசியமானது என்றாலும் உப்பின் அளவு அதிகரிக்கும் போது இரத்த ஓட்டத்தின் வேகம் அதிகரித்து, உருவாகிறது.
ஆரோக்கியமான ஒரு மனிதனுக்கு தினமும் 2. 3 கிராம் அளவு உப்பு போதுமானது என்கின்றனர் மருத்துவர்கள். ஆனால், நோயாளிகள், உடல் நல பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவரை ஆலோசித்து அளவை முடிவு செய்ய வேண்டும்.
உடலில் உப்பு கூடும் போது கால்சியம் இயல்பாகவே குறையும், என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். அதிக அளவு உப்பு கால்ஷியத்தை உரிஞ்சி விடும்.
எனவே உப்பை அளவோடு சாப்பிடுவதே உடல் நலத்துக்கு சிறந்தது. உப்பு அதிக அளவில் உள்ள உணவுகளை தொடாதீர்கள். குறைவான உப்பை சேர்த்து கொள்வதை பழக்கிக் கொண்டால் நீண்ட நாட்கள் உடல் நலத்தோடு வாழலாம்.