துளசியை பச்சையாக மென்று சாப்பிடுவதால் ஏற்படும் 7 நன்மைகள்!
உலகளவில் பெரிதும் அறியப்படும் ஆரோக்கிய மூலிகை, துளசி. இதை பலர் சமையலில் கூட பயன்படுத்துகின்றனர். இதில் வைட்டமின் ஏ,சி மற்றும் கே சத்துகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் இருக்கும் பிரா நன்மைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
சரும பராமரிப்பு:
சரும பராமரிப்புக்கு உதவும் மூலிகைகளுள் ஒன்று துளசி. இதில், இருக்கும் சத்துகளால் சருமம் தெளிவாகும் என மருத்துவர்களால் கூறப்படுகிறது.
மனநலன்:
மன நலனை மேம்படுத்தும் சக்தி, துளசியில் இருக்கிறது. பதற்றம், மன அழுத்தம் ஆகியவற்றை குறைக்கவும் இதனை சாப்பிடலாம்.
நோயெதிர்ப்பு சக்தி:
உடலில் பிணி அண்ட விடாமல் தவிர்க்க, துளசியை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இதனால், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இதய ஆரோக்கியம்:
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, துளசியை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இதனால் கொழுப்பின் அளவு குறைந்து, மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கும்.
அஜீரண கோளாறு:
நாம் சாப்பிடும் உணவுகளால் நமக்கு அஜீரண கோளாறு ஏற்படும். இதனை தவிர்க்க, துளசியை வெறும் வயிற்ரில் சாப்பிடலாம்.
இரத்த சர்க்கரை அளவு:
எண்ணெய் மற்றும் உப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் இரத்தில் சர்க்கரை அளவு அதிகமாகலாம். இதை குறைக்க வெறும் வயிற்றில் துளசி சாப்பிடலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ்:
துளசியில் இருக்கும் வைட்டமின் ஏ மற்றும் சி சத்துகள், உடலில் ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸை அதிகரிக்குமாம் இதனால், நாள்பட்ட நோய் பாதிப்புகள், கேன்சர் நோய் பாதிப்பு ஆகியவற்றை தடுக்கலாம் என கூறப்படுகிறது.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)