யூரிக் அமில பிரச்சனையா? இந்த உணவுகளை நம்பி சாப்பிடுங்க, கட்டுக்குள் வைக்கலாம்
பருப்பு வகைகள், ராஜ்மா, கொண்டைக்கடலை போன்றவற்றில் புரதச்சத்தும் நார்ச்சத்தும் அதிகமாக உள்ளன. பொதுவாக இவற்றில் பியூரின்கள் குறைவாக இருக்கின்றன. யூரிக் அமில நோயாளிகளுக்கு இவை சமச்சீர் உணவின் ஒரு அங்கமாக பார்க்கப்படுகின்றன.
கொழுப்பு நீக்கப்பட்ட பால், தயிர் மற்றும் சீஸ் போன்ற குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் யூரிக் அமிலத்தைக் குறைக்க உதவும். பால் பொருட்களை உட்கொள்வது கீல்வாதத்திலிருந்து பாதுகாக்கும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவை மூட்டு வலிக்கும் நிவாரணமாக அமையும். அதுமட்டுமின்றி உடலின் ஒட்டுமொத்த ஆரோகியத்தையும் இவை மேம்படுத்தும்.
புளிப்பு சுவை கொண்ட செர்ரி பழங்களில், அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன. இவை யூரிக் அமிலத்தைக் குறைக்க உதவும். செர்ரி பழங்களில் அந்தோசயினின்கள் எனப்படும் கூறுகளும் இருக்கின்றன. அவை வீக்கத்தைக் குறைப்பதிலும் யூரிக் அமிலத்தை உடலை விட்டு அகற்றுவதிலும் பயனுள்ளதாகக் கருதப்படுகின்றன.
காய்கறிகள் உடல் ஆரோக்கியத்திற்கு மிக அவசியமானவை. பல காய்கறிகளில் பியூரின்கள் குறைவாக உள்ளன. ஆகையால், யூரிக் அமில அளவு அதிகமாக உள்ளவர்கள் இவற்றை தங்கள் டயட்டில் சேர்க்கலாம். ப்ரோக்கோலி, காலிஃபிளவர் மற்றும் பிற பச்சைக் காய்களும் கீரை வகைகளும் யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைக்க உதவியாக இருப்பதோடு உடல் ஆஅரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
ஆப்பிளில் மாலிக் அமிலம் உள்ளது. இது யூரிக் அமிலத்தை செயலற்றதாக்கி உடலில் இருந்து அகற்ற உதவுகிறது. ஆப்பிள்களை தவறாமல் சாப்பிடுவது யூரிக் அமிலத்தை குறைக்க உதவுவதோடு கீல்வாதத்திலும் நிவாரணம் அளிக்கின்றது.ஆப்பிள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தீற்கும் நல்லது.
ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இதைத் தொடர்ந்து உட்கொள்வதால், யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைக்கலாம். மேலும், இவற்றில் உள்ள சிட்ரிக் அமிலம் சிறுநீரக கல் உருவாவதை தடுக்க உதவுகிறது.
ஓட்ஸ், பார்லி, கினோவா, பிரவுன் அரிசி போன்ற முழு தானியங்கள் யூரிக் அமிலத்தைக் குறைக்கும் உணவில் சேர்க்கக்கூடிய சத்தான உணவுகளாகும். இவற்றில் சுத்திகரிக்கப்பட்ட தானியங்களை விட குறைவான அளவில் பியூரின்கள் உள்ளன. இவை உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கும் இவை ஏற்றதாக கருதப்படுகின்றன.
ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி மற்றும் ராஸ்பெர்ரி போன்ற பெர்ரி வகை பழங்களில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளன. இவை வீக்கத்தைக் குறைக்கவும் யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. இவை உடலுக்கு பல வித ஆரோக்கிய நன்மைகளையுல் அளிக்கின்றன.
பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.