பயம் காட்டும் சுகர் லெவலை பக்குவமாய் குறைக்கும் பச்சை இலைகள்: சாப்பிட்டு பாருங்க
சில இயற்கையான வழிகளில் இரத்த சர்க்கரை அளவை (Blood Sugar Level) கட்டுக்குள் வைக்கலாம். அவற்றில் ஒரு வழி சில இலைகளை பயன்படுத்து. சில இலைகளை மென்று சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம். இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் இலைகள் பற்றி இங்கே காணலாம்.
வேப்பிலையில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த வேப்பிலை பெரிய அளவில் உதவுகின்றது. இதில் அதிக அளவில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
வெந்தய கீரையில் பல வித மருத்துவ குணங்கள் உள்ளன. வெந்தயக் கீரை, வெந்தய விதைகள், வெந்தய பொடி என அனைத்தும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். வெந்தயம் சுகர் நோயாளிகளுக்கு மிக உதவியாக இருக்கும். இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
துளசி இலைகளை தினமும் கடித்து சாப்பிட்டால், இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கலாம். துளசி தேநீரும் உடலுக்கு நல்லது. இது உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கின்றது.
கற்றாழையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. கற்றாழையில் இரத்தச் சர்க்கரை அளவை குறைக்கும் பண்புகள் உள்ளன. காலையில் வெறும் வயிற்றில் இதனை உட்கொள்வதால் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கலாம்.
இன்சுலின் செடியின் அறிவியல் பெயர் Costus igneus. இதன் இலைகளில் பல வித மருத்துவ குணங்கள் உள்ளன. இதனை தொடர்ந்து உட்கொள்வதால் இரத்த குளுக்கோஸ் அளவு கட்டுக்குள் இருக்கும்.
தினமும் வெற்றிலையை நன்றாக கடித்து சாப்பிடுவதால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் இன்னும் பல ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கின்றன.
நீரிழிவு நோயை கட்டுப்படுத்த மாவிலை உதவும். மாவிலையில், நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் இன்னும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இவை நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.