ரத்த அணுக்கள் குறைவாக இருக்கிறதா? ‘இதை’ மட்டும் சாப்பிடுங்க!
Legumes:
உடலில் ரத்த அணுக்களை அதிகரிக்க, வேர்கடலை, பீன்ஸ் போன்ற பருப்பு வகை உணவுகளை சாப்பிடலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
பீட்ருட்:
உடலில் ரத்த அணுக்களை அதிகரிக்க பீட்ரூட்டை டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம். இதில் இரும்பு சத்துகள் அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதை பொறியல் செய்தும் சாப்பிடலாம் அல்லது ஜூஸாகவும் குடிக்கலாம்.
பேரிச்சம்பழம்:
சுவையான மற்றும் ஆரோக்கியமான உலர் பழங்களுள் ஒன்று, பேரிச்சம்பழம். இது, நீரிழிவு நோயாளிகள் உட்கொள்ளும் மாலை நேர ஸ்நாக்ஸ் ஆகவும் இருக்கிறது.
மாதுளம்பழம்:
கால்சியம் மற்றும் புரதச்சத்து நிறைந்த பழங்களுள் ஒன்று, மாதுளை. இந்த பழத்தில் உடலின் ரத்த அணுக்களை அதிகரிக்கும் சத்துகள் உள்ளது.
ஃபோலிக் ஆசிட்:
ஃபோலிக் ஆசிட் நிறைந்த உணவுகளில், உடலின் ஹீமோக்ளோபின் அளவை அதிகரிக்கும் சத்து இருக்கிறது. வாழைப்பழம், ப்ராக்கலி, முளைக்கட்டிய பயிர் வகைகளை இதற்கு சாப்பிடலாம்.
இரும்பு சத்து நிறைந்த உணவுகள்:
இரும்பு சத்து நிறைந்த உணவுகளையும் உங்கள் உணவு டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம். முட்டை, கீரை, டோஃபு, ட்ரை ஃப்ரூட்ஸ் உள்ளிட்ட உணவுகளில் உடலில் ரத்த அணுக்களை அதிகரிக்கும் சத்துகள் உள்ளன.
வைட்டமின் சி உணவுகள்:
வைட்டமின் சி உணவுகளும் உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும். தக்காளி, பெர்ரி பழங்கள், கிரேப் பழங்கள், குடை மிளகாய் உள்ளிட்ட உணவுகளில் வைட்டமின் சி சத்துகள் உள்ளன. இதனால் உடலில் ஹீமோகுளோபின் அளவுகள் அதிகரிக்கும்.