குழந்தைகளின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியை வளர்க்க 8 நடைமுறை குறிப்புகள் !!
குழந்தைகளின் உணர்வுகள், எண்ணங்கள் மற்றும் கவலைகளை வெளிப்படுத்த ஏதுவாக பெற்றோர்கள் ஒரு பாதுகாப்பான மற்றும் ஆதரவான சூழலை உருவாக்கிக் கொடுப்பது ஒவ்வொரு பெற்றோர்களின் கடைமையாகும்.
குழந்தைகளின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமான சில செயல்பாடுகளில் அவர்களை ஈடுபடுத்த அனுமதிக்க வேண்டும். இது குழந்தைகளுக்கு இயக்க திறன்களை வளர்த்துக் கொள்ளவும், ஆற்றலை வெளியிடவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
எந்தவொரு பெற்றோரும் குழந்தைகள் முன் சண்டைபோடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சண்டைகள் அவர்கள் மனதைப் பெரிதும் பாதிப்படையச் செய்யும். குழந்தைகளிடம் பெற்றோர்கள் ஒற்றுமையை மேம்படுத்த நேர்மறை உறவுகள் வளர்த்துக் கொள்ளுங்கள்.
குழந்தைகள் புத்துணர்வுடன் இருக்க அவர்களுக்கு நிச்சயம் ஊட்டச்சத்து அதிகம் உள்ள பழங்கள், கீரைகள் மற்றும் காய்கறிகள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது குழந்தையின் வளர்ச்சி, அறிவாற்றல் வளர்ச்சி மற்றும் மனநிலையை ஒழுங்குபடுத்தல் உள்ளிட்ட அனைத்தும் பராமரிக்கச் சரியான ஊட்டச்சத்து அவசியம்.
குழந்தைகளைத் தனியாகத் தூங்க அனுமதிப்பதைவிட ஒன்றாகச் சேர்ந்து தூங்கினால் தேவையற்ற சிந்தனைகள் ஏற்படாமல் தடுக்க உதவும். மேலும் குழந்தைகளுக்கு போதுமான தூக்கம், பள்ளி வேலை நேரம் மற்றும் தளர்வுகள் குழந்தைகளின் கட்டமைப்பு மற்றும் முன் கணிப்பு ஆகியவற்றை உறுதி செய்ய உதவுகின்றன.
சுயமரியாதையை வளர்க்க தற்போது பள்ளிகளில் அதிகரித்து வருகிறது. அதேபோல் வீட்டிலும் குழந்தைகள் மனதில் அதிக நெகிழ் திறன் மற்றும் நம்பிக்கைகள் நிறைந்திருக்கும். இது அவர்களின் சுதந்திரத்தை ஊக்குவித்து செயல் திறனைக் கட்டுப்பாட்டுடன் உணர ஒரு வாய்ப்பு ஏற்படுகிறது.
பெரிதாகக் குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படக் காரணம் குடும்பம், நண்பர்கள் மற்றும் பள்ளி ஆகியவற்றில் அதிகமாக மன அழுத்தத்தில் உடைந்திருப்பார்கள். அதனைப் பெற்றோர்கள் குழந்தைகளிடம் கேட்டறிந்து பள்ளி பாடத்திட்டத்தில் அதிகப்படியான மன அழுத்தம், குடும்பம் மற்றும் நண்பர்களிடையே இருக்கும் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த அல்லது தவிர்க்க சில பேச்சு வார்த்தைகள் நடத்துங்கள்
குழந்தைகளிடம் உள்ள சிக்கலைத் தீர்ப்பது குறித்த சிறந்த எடுத்துக்காட்டு கருத்துகளை முன்மொழிய வேண்டும். அவர்களின் ஆரோக்கியமான உணர்ச்சி கட்டுப்பாட்டு சுய கவனிப்பு போன்றவற்றைப் பின்பற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கக்கூடும்.