வட்டியை அள்ளித் தரும் பெண்களுக்கான ‘சில’ சிறு சேமிப்பு திட்டங்கள்!

Mon, 27 Nov 2023-8:31 pm,

அரசின் திட்டங்களீல் முதலீடு செய்வது உத்திரவாத வருமானத்துடன், பணத்திற்கு முழு பாதுகாப்பையும் வழங்குகிறது என்பதை மறுக்க இயலாது. பெண்களுக்கென மத்திய அரசு மற்றும் வங்கிகள் தரும் சிறப்பான சிறு சேமிப்பு திட்டங்கள் குறித்த விபரங்களை அறிந்து கொள்ளலாம். இவை வட்டியை அள்ளித் தருவதோடு, மிகவும் பாதுகாப்பான முதலீடாகவும் இருக்கின்றன.

மத்திய அரசின், பெண்களுக்கான பிரத்தியேக சிறுசேமிப்பு திட்டமான  'மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம்'  திட்டத்தில் அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை சேமிக்கலாம். மகிளா சம்மான் சேமிப்பு திட்ட முதலீட்டிற்கு 7.5% நிலையான வட்டி கிடைக்கும். மேலும், இதில் முதலீடு செய்த பணத்தில் பகுதியளவு தேவைக்கு எடுக்கும் சலுகையும் உண்டு

 

பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கான மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில், மாதம் குறைந்த பட்சம் ரூ.50 முதலீட்டில் கணக்கை தொடங்கலாம். பெண் குழந்தைகள் பிறந்த நாளில் இருந்து 9 வயதுக்குள் கணக்கை தொடங்கிவிட வேண்டும். கணக்கு தொடங்கப்படும் நாளில் இருந்து 15 ஆண்டுகள் பணம் செலுத்த வேண்டும். செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி விகிதத்தை 7.6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது

 

தங்கத்தில் செய்யும் முதலீடு எப்போதுமே வீண் போகாது. இளம் பெண்கள், இல்லத்தரசிகள் சிறு தொகையை நம்பிக்கையான நகைக்கடைகளில் செலுத்தி குறிப்பிட்ட மாத முடிவில் செய்கூலி, சேதாரமின்றி நகைகளை பெற்றுக்கொள்ளலாம்.  தங்க நாணயங்களாக வாங்கி சேமிப்பதும் சிறந்தது.

தபால் அலுவலகத்திலும், அனைத்து வங்கிகளிலும் அந்த தொடர் வைப்பு கணக்கு சேமிப்பு திட்டத்தில், 6 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை சேமிக்க முடியும். குறைந்த பட்சம் மாதம் 500ரூ முதல் சேமித்து வரலாம். குடும்ப தலைவிகளுக்கும், வேலை பார்க்கும் இளம் பெண்களுக்கும் ஏற்ற திட்டம் இது.

ஃபிக்சட் டெபாசிட் என்பது அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற சேமிப்பு முறையாகும். வங்கி அல்லது தபால் நிலையங்களில் குறிப்பிட்ட காலத்திற்கு முதலீடு செய்து மாதந்தோறும் நிலையான வருமானத்தை பெறலாம். முதலீடுகளில் அதிகபட்சமாக 7% முதல் 8.50% வரை வருமானம் ஈட்ட முடியும்.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link