கொழுப்பை எரிக்க... புரோட்டீன் நிறைந்த ‘சூப்பர்’ சைவ உணவுகள்!
புரத சத்து மிக்க உணவுகள் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. காலை உணவின் போது புரதம் நிறைந்த உட்கொண்டால், சீக்கிரம் பசி எடுக்காமல் இருக்கும். புரதம் என்றதும் நமக்கு நினைவில் வருவது முட்டை. ஆனால், சைவ உணவில் புரதம் நிறைந்த சூப்பர் உணவுகள் உள்ளன.
பாலாடைக்கட்டி என்னும் பன்னீரில் அதிக புரதம் உள்ளதோடு, கலோரிகள் மற்றும் கொழுப்புகள் மிகக் குறைவு. கூடுதலாக, இதில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி 12, ரைபோஃப்ளேவின் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
கீரையில், வேகவைத்த முட்டையில் உள்ள அளவு புரோட்டீன் உள்ளது. கலோரிகளும் மிகவும் குறைவு. சாலட் ஆக சாப்பிடுவதை விட, வேகவைத்த கீரை வைட்டமின்களைத் தக்க வைத்துக் கொள்ளவும் கால்சியத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது.
பருப்பு வகைகள்: சுமார் 1 கப் சமைத்த பருப்பில் 18 கிராம் புரதம் உள்ளது. பருப்புகளில், புரதம் மட்டுமல்லாது, நார்ச்சத்துக்கான நல்ல ஆதாரமாக அறியப்படுகிறது. இதில், மெதுவாக ஜீரணிக்கப்படும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ளன. இவை அனைத்தும், உங்கள் உடல் பருமனை குறைக்க முக்கியமானது.
ப்ரோக்கலியில் புரதம் மட்டுமல்லாது, வைட்டமின் சி, கே மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனை அதிக அளவில் வேக விட்டால், இதன் ஊட்டசத்து மதிப்பு குறைந்து விடும். எனவே, சமைக்கும் போது கவனம் தேவை.
சோயாபீன்ஸ் புரதத்தின் முழுமையான ஆதாரம். இது ஒரு நாளைக்கு போதுமான புரத தேவையை பூர்த்தி செய்யும். நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். இதனால் எடை இழப்புக்கான சிறந்த உணவு.
கிரேக்க தயிர்: புரதத்தைத் தவிர, கிரேக்க தயிரில் பல வித ஊட்டச்சத்துக்கள் உள்ளது. 100 கிராம் கிரேக்க தயிரில், சுமார் 10 கிராம் புரதம் உள்ளது. எனவே, இது எடை இழப்ப்பிறகான சிறந்த உணவாகும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.