இத மட்டும் செஞ்சிடாதீங்க... பிறகு கணக்கு காலி, பணம் அம்பேல்: எச்சரிக்கும் எஸ்.பி.ஐ

Mon, 22 Nov 2021-7:35 pm,

பெரும்பாலான பண்டிகைக் காலங்களில், இலவச பரிசுகள் அல்லது வவுச்சர்கள் அதிகமாகக் கிடைப்பதால் மக்கள் அவற்றில் ஆர்வம் காட்டுகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இலவசப் பரிசு என்று செய்தி வரும்போதெல்லாம் மக்கள் அதில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்குகிறார்கள். சிலர் இதை கண்மூடித்தனமாக நம்பவும் செய்கிறார்கள். ஆனால் இந்த நம்பிக்கை தீங்கு விளைவிக்கும் ஒரு விஷயமாகவும் மாற வாய்ப்பு உள்ளது. இப்படிப்பட்ட இலவச பரிசுகள் விவகாரத்தில், வாடிக்கையாளர்கள் இந்தப் போலி இணைப்பைக் கிளிக் செய்து, அவர்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை சில நிமிடங்களில் இழந்துவிடுகிறார்கள்.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ (SBI) இணைய மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு வாடிக்கையாளர்களை அவ்வப்போது எச்சரித்து வருகிறது. பாரத ஸ்டேட் வங்கி (SBI) தனது ட்விட்டர் கணக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் வங்கி விவரங்கள், ஏடிஎம் மற்றும் யுபிஐ பின்னை பகிருமாறு எஸ்பிஐ ஒருபோதும் கேட்பதில்லை என்று இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.

ஆகையால், ஏடிஎம் அல்லது யுபிஐ பின்னைக் கேட்டு செய்திகள் வந்தாலோ, அல்லது ஏதாவது இணைப்பைக் கிளிக் செய்யச் சொன்னாலோ, அதைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் வங்கி எச்சரித்துள்ளது.

எஸ்பிஐ தனது வாடிக்கையாளரிடம் கணக்கு எண், டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு விவரங்களைக் கேட்பதில்லை. உங்கள் இணைய வங்கி மற்றும் OTP எண்களை யாருடனும் பகிர வேண்டாம். மொபைல் போன் அல்லது செய்தியில் உள்ள எந்த வகையான இணைப்பையும் கிளிக் செய்ய வேண்டாம்.

இதுபோன்ற செய்திகளை நீங்களும் பெற்றால், முதலில் இந்த செய்திகளை கவனமாக படிக்கவும். பின்னர் இது போலி செய்தி என உங்களுக்குத் தோன்றினால், வாடிக்கையாளர்கள் சைபர் கிரைம் இணையதளமான https://cybercrime.gov.in இல் புகார் செய்யலாம். அல்லது ஹெல்ப்லைன் எண்ணிலும் இது பற்றிய தகவலை தெரிவிக்கலாம்.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link