எக்கச்சக்க சம்பளம், ஏகப்பட்ட மரியாதை கொடுக்கும் டாப் அரசாங்க வேலைகள்

Thu, 05 May 2022-4:29 pm,

இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் சிவில் சர்வீசஸ் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். வெளிநாடுகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த அதிகாரிகள் மீது பெரும் பொறுப்பு உள்ளது. இந்திய வெளியுறவு செயலாளராக பணியாற்றும் அதிகாரிகளின் சம்பளம் 60,000 ரூபாயில் இருந்து தொடங்குகிறது.

 

இந்தியாவில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு தனி மதிப்பு உண்டு. ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளின் சம்பளம் மாதம் 56,000 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. ஆடம்பரமான பகுதியில், பெரிய பங்களா, அரசாங்க வாகனம், ஓட்டுனர், பாதுகாவலர்கள் உள்ளிட்ட பல வசதிகள் கிடைக்கும் இந்த பணிகள் இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

டிஃபென்ஸ் சர்வீஸ் அதாவது பாதுகாப்பு சேவையில் சேரும்போது, ​​ஆரம்ப சம்பளம் மாதம் ரூ. 55,000 ஆக இருக்கும். கடினமாக உழைத்தால் மாதம் 2.5 லட்சம் ரூபாய் வரை சம்பளம் உயரலாம். இது தவிர சமூகத்தில் இந்த சேவைக்கான அதிக மரியாதை உள்ளது. இந்த சேவையில் சேருவதன் மூலம் கிடைக்கும் நன்மைகளும் அற்புதமானவை.

குழந்தை பருவத்தில், பலர் விஞ்ஞானி மற்றும் பொறியியலாளர் ஆக வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். உங்களின் இந்தக் கனவு நனவாகும் பட்சத்தில், இஸ்ரோ, டிஆர்டிஓவில் வேலை கிடைத்தால், மாதந்தோறும் 68,000 ரூபாய் சம்பளம் பெறலாம். இது ஆரம்ப சம்பளமே, காலப்போக்கில் இது அதிகரிக்கலாம். பணத்தை விட இந்த பணியில் கிடைக்கும் மரியாதையும் திருப்தியும் மிக அதிகமாகும்.

வங்கித் துறையில் நீங்கள் முயற்சி செய்ய விரும்பினால், ஆர்பிஐ கிரேடு பி உங்கள் வாழ்க்கையைத் தொடங்க ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். மாதம் ரூ.65,000 சம்பளம் தவிர, ஆடம்பரமான இடத்தில் பெரிய பிளாட், எரிபொருள் கொடுப்பனவு, குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை என பல வசதிகளும் இதில் கிடைக்கும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link