Home Decor Ideas: ₹2000 இருந்தாலே போதும் வீட்டை அழகாக அலங்கரிக்கலாம்!

Sun, 04 Jun 2023-7:35 pm,

வீட்டை அலங்கரிப்பதற்கோ அல்லது உட்புற தோற்றத்தை மாற்றுவதற்கோ நிறைய பணம் தேவையில்லை. சிக்கனமான முறையில், குறைவான செலவிலும் வீட்டை அலங்கரிக்கலாம். அதிக பணம் செலவழிக்காமல், லைட்டிங்குகள், செடிகள், கார்பெட்டுகள் போன்றவற்றின் மூலம் வீட்டின் தோற்றத்தையே மாற்றலாம்.

குறைந்த பணத்தில் உங்கள் வீட்டை அலங்கரிக்க விளக்குகளை வாங்குவது ஒரு சிறந்த வழியாகும். நீங்கள் அதை ஆன்லைனில் அல்லது அருகிலுள்ள சந்தையில் வாங்கலாம்.ஆனால் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் மட்டுமே அதிக விருப்பங்களைப் பெறுவீர்கள். உங்களிடம் 2000 நோட்டு இருந்தால், கேஷ் ஆன் டெலிவரி என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் படுக்கையறை, ஹால் அல்லது புஜை அறைக்கும் பல்வேறு அளவுகள் மற்றும் வடிவமைப்புகளில் அழகான விளக்குகளை ஆர்டர் செய்யலாம்.

 

கோடை காலத்தில் அறையின் வெப்பத்தை குறைப்பதில் உட்புற தாவரங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், இது வீட்டின் அழகைக் கூட்டுகிறது. அதன் பானைகள் ஆக்கப்பூர்வமான வடிவமைப்பில் உள்ள தொட்டியில் இருக்கும் போது அழகு இன்னும் அதிகரிக்கிறது.

வால் ஆர்ட் அல்லது வால்பேப்பர் குறைந்த செலவில் வீட்டு அலங்காரத்திற்கு ஒரு சிறந்த யோசனை. நீங்கள் ஆன்லைனில் அல்லது எந்த உள்ளூர் கடையிலும் வாங்கலாம். ஆனால், வீட்டு இன்டீரியர் தோற்றத்தை மாற்றுவதுடன், 2000 ரூபாய்குள் உங்கள் வேலை முடிந்து விடும். வால் ஆர்ட் அல்லது வால்பேப்பரின் வடிவமைப்பு மற்றும் வண்ணத்தைத் தேர்ந்தெடுக்கும்போது சுவர் மற்றும் வீட்டில் உள்ள பிற பொருட்களின் நிறத்தை எப்போதும் மனதில் கொள்ளுங்கள். ஆர்டர் செய்வதற்கு முன் வாடிக்கையாளர் மதிப்புரைகளையும் படிக்கவும்.

வீடு சிறியதாக இருந்தாலும், சில எளிய விஷயங்களைக் கொண்டு ஆடம்பரமான தோற்றத்தைக் கொடுக்கலாம். இதில் மிகப் பெரிய பங்கு கம்பளத்துக்கு உண்டு. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் படுக்கையறை,ஹால் மற்றூம் இதர பகுதிகளுக்கு வெவ்வேறு அளவுகள் மற்றும் வண்ணங்களின் தரைவிரிப்புகளை வாங்கலாம். இது பெரிய மாற்றங்களைச் செய்யாமல் உங்கள் வீட்டின் தோற்றத்தை முற்றிலும் மாற்றிவிடும். நீங்கள் ஆன்லைனில் அல்லது எந்த உள்ளூர் சந்தையிலும் எளிதாக வாங்கலாம்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link