கடுமையான தொண்டை வலியா... கிச் கிச்சை போக்கும் வீட்டு வைத்தியங்கள்!
குளிர்காலத்தில் சளி, காய்ச்சல் போன்ற பருவகால நோய்கள் ஏற்படுவது வாடிக்கைதான். இந்த நோய்களைத் தவிர, தொண்டை புண் கூட பலருக்கும் தொந்தரவை கொடுக்கும். தொண்டை புண் பிரச்னை அதிகமானால், சாப்பிடுவதற்கும் குடிப்பதற்கும் கூட சிரமமாக இருக்கும்.
சில சமயங்களில் இந்த வலி இரண்டு முதல் மூன்று நாட்களில் தானாகவே குணமாகும். சில நேரங்களில் அது பல நாள்களுக்கு குணமடையாது. தொண்டை வலியில் இருந்து நிவாரணம் பெற நீங்கள் சில வீட்டு வைத்தியங்களை பின்பற்றலாம்.
வெந்தயம்: இரும்பு, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம், பாஸ்பரஸ், ஃபோலிக் அமிலம் உள்ளிட்ட உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன. தொண்டை வலிக்கு, வெந்தயத்தை தண்ணீரில் சேர்த்து, நீரின் நிறம் மாறும் வரை கொதிக்க வைக்கவும். இந்த நீரை நீங்கள் குடிக்கவும் செய்யலாம் மற்றும் வாய் கொப்பளிக்கவும் செய்யலாம்.
இலவங்கப்பட்டை: இந்திய குடும்பங்களின் சமையலறையில் இருக்கும் பல மசாலாப் பொருட்களில் இலவங்கப்பட்டையும் ஒன்றும். தொண்டை வலியில் இருந்து நிவாரணம் பெற, வெதுவெதுப்பான நீரில் இலவங்கப்பட்டை பொடியுடன் தேன் மற்றும் எலுமிச்சை கலந்து ஒரு நாளைக்கு 2-3 முறை குடிக்கவும்.
மஞ்சள்: வெந்நீரில் ஒரு சிட்டிகை மஞ்சளைக் கலந்து கொதிக்க வைத்து சிறிது ஆறவிடவும். இந்த நீரால் வாய் கொப்பளிக்கவும். உங்களுக்கு நிச்சயம் நிவாரணம் கிடைக்கும். மஞ்சளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. தொண்டை வலியில் இருந்து நிவாரணம் பெறுவதோடு, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியும் வலுவடையும்.
அதிமதுரம்: கால்சியம், கிளிசரிக் அமிலம், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், ஆன்டிபயாடிக்குகள் மற்றும் புரதம் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் அதிமதுரத்தில் காணப்படுகின்றன. அதிமதுரப் பொடியை தேனுடன் சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி நீங்கும். இதைத் தவிர, வெந்நீரில் அதிமதுரப் பொடியுடன் வாய் கொப்பளிப்பது உங்களுக்கு நன்மை பயக்கும்.
நெல்லிக்காய்: தொண்டை வலியில் இருந்து நிவாரணம் பெற, நெல்லிக்காய் சாற்றை தேனுடன் கலந்து தினமும் உட்கொள்ளுங்கள். நெல்லிக்காய் ஜூஸில் வைட்டமின் சி மற்றும் தேனில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன, இது தொண்டை வலியில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)