வருமானமே கொஞ்சம்! கோடீஸ்வரராவது கனவு தான் என பெருமூச்சு விடுபவரா? கனவை நனவாக்கும் SIP
சாதாரண வருமானம் உள்ளவர்களுக்கு கோடீஸ்வரர் என்ற வார்த்தை எட்டாக்கனியாகவே இருக்கும். அவர்கள் மில்லியனராக வேண்டும் என்றால், லாட்டரி அடிக்க வேண்டும் ஆனால், சிறிய அளவிலான தொகையை முறையாக முதலீடு செய்து வந்தால், அது பெரிய தொகையாக வளரும்.
அதிகமாகச் சம்பாதித்தால் தான், சேமிக்கமுடியும் என்பது தவறான எண்ணம். அதேபோல அதிகமாகச் சேமித்தால்தான் கோடீஸ்வரர் ஆக முடியும் என்பதும் சரியல்ல. முதலீட்டுக்கு சரியான முறையை கையாண்டால் 20000 ரூபாய் சம்பளம் வாங்குபவர்களும் கோடீஸ்வரர்களாகலாம்.
கோடீஸ்வரர் ஆக எங்கு எப்படி முதலீடு செய்வது என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். நீண்ட காலம் தொடர்ந்து செய்யும் முதலீடுகள் உங்களை கோடீஸ்வரராக்கும். SIP எனப்படும் முறையான முதலீட்டுத் திட்டத்தில் சிறிய அளவில் முதலீடு செய்து பெரிய நிதியை உருவாக்கலாம்.
முதலீடு செய்வதற்கு முன் குடும்பத்திற்கான அடிப்படைத் தேவைகளை கவனித்துக்கொள்வது அவசியம். எனவே, திட்டமிட்டு செலவிடுவது அவசியம். அதே சமயத்தில் ஒருவர் தனது சம்பளத்தில் 15 முதல் 20 சதவீதத்தை முதலீடு செய்வது சாத்தியமானது. அது ஆளுக்கு ஆள் மாறுபடும்.
SIP மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதன் மூலம் முதலீட்டின் கூட்டுத்தொகை என்ற நன்மை உள்ளது. பங்குச்சந்தையுடன் இணைக்கப்படுவதால், மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடுகளில் ஓரளவு ஆபத்தும் இருக்கிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில், SIP வருமானம் சராசரியாக 12 சதவீத வருவாயைக் கொடுத்துள்ளது
SIP இல் 4000 ரூபாய் முதலீடு செய்தால்,12% வருமானம் என்ற உத்தேச கணக்கீட்டில், 28 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் பணம் சேர்ந்துவிடும்.
நிதி ஆலோசர்களின் ஆலோசனையுடன் முதலீட்டு முடிவுகளை எடுப்பது நல்லதாக இருக்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு நிதி நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். முதலீடு தொடர்பான எந்த ஒரு முடிவெடுப்பதற்கு முன்னதாக நிதி ஆலோசர்களை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.