SBI ஃபாஸ்டேக்கிற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி விண்ணப்பிப்பது மற்றும் ரீசார்ஜ் செய்வது?
வங்கிகள் கூட தங்கள் தளங்களில் FASTags ஐப் பயன்படுத்துவதையும் ரீசார்ஜ் செய்வதையும் எளிதாக்கியுள்ளன. எஸ்பிஐ (ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா) வங்கியும், வாகனங்களுக்கான ஃபாஸ்டேக்கை வாங்கவும் ரீசார்ஜ் செய்யவும் ஒரு ஏற்பாட்டை வழங்குகிறது.
நீங்களும் SBI வாங்கி வாடிக்கையாளராக இருந்தால், எப்படி ஃபாஸ்டேக்கை ரீசார்ஜ் செய்வது என்பதை பார்க்கலாம்:
படி 1: எஸ்பிஐ ஃபாஸ்டேக்கிற்கு விண்ணப்பிக்க அருகிலுள்ள ஏதேனும் POS (பாயிண்ட் ஆஃப் சேல்) இருப்பிடத்திற்கும் செல்ல வேண்டும்.
படி 2: KYC ஆவணங்கள் (அடையாளச் சான்றுகள் மற்றும் புகைப்படம்) மற்றும் வாகன ஆவணங்கள் (அசல் மற்றும் புகைப்பட நகல்) ஆகியவற்றையும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டும்.
படி 3: FASTAg க்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்திச் செய்து ஆவணங்களை POS இல் சமர்ப்பிக்கவும்.
படி 4: மீதமுள்ள வழிமுறைகளை ஆன்லைனில் செய்ய வேண்டும். அதிகாரப்பூர்வ எஸ்பிஐ வலைத்தளத்திற்குச் செல்லுங்கள் அல்லது உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப் / PC யிலிருந்து ஏதேனும் ஒரு வெப் பிரௌசரில் fastag.onlinesbi.com என்பதைத் திறக்கவும். இது உங்களை பிரத்யேக FASTag பக்கத்திற்கு நேரடியாக கொண்டு செல்லும்.
படி 5: இப்போது, உங்கள் தகவல்களை (தொலைபேசி எண் மற்றும் கடவுச்சொல்) பயன்படுத்தி Login செய்ய வேண்டும்.
படி 6: திரையில் காட்டப்பட்டுள்ளபடி கேப்ட்சாவை உள்ளிட்டு Login செயல்முறையை முடிக்கவும்.
படி 7: நீங்கள் இப்போது வாகன விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, ஃபாஸ்ட் டேக் கார்டை ரீசார்ஜ் செய்ய திரையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.