வாட்ஸ்அப் மூலம் கேஸ் சிலிண்டரை புக் செய்வது எப்படி?
கேஸ் சிலிண்டரை எளிய முறையில் whatsapp-லயே புக் செய்து கொள்வதற்கான வழிமுறைகளை தெரிந்து கொள்ளலாம்.
நாடு முழுவதும் செயல்பட்டு வரும் சிலிண்டர் எரிவாயு நிறுவனங்கள் பயனர்கள் புக் செய்யும் வரிசையின்படி எரிவாயுவை விநியோகம் செய்கின்றனர்.
இவற்றில் இன்டேன் நிறுவனம் WhatsApp மூலமாகவே வாடிக்கையாளர்கள் சிலிண்டர் புக்கிங் செய்து கொள்வதற்கான வழிமுறைகளை தெரிவித்துள்ளது.
இன்டேன் கேஸ் சிலிண்டர் ரீபில் பதிவு செய்வதற்கு முதலில் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணின் வாட்ஸ் அப்பில் 7588888824 என்ற எண்ணை சேமிக்க வேண்டும்.
இதன்பிறகு WhatsApp ல் இந்த எண்ணிற்கான சார்ட்டில் சென்று கேஸ் புக்கிங் ரீபில் என்று டைப் செய்து அனுப்ப வேண்டும்.
இப்பொழுது உங்களுக்கான கேஸ் சிலிண்டர் பதிவு செய்யப்பட்டு விடும்.
கேஸ் சிலிண்டர் முன்பதிவு நிலையை அறிந்து கொள்வதற்கு, இதே எண்ணில் இருந்து ஸ்டேட்டஸ் # மற்றும் ஆர்டர் எண்ணை டைப் செய்து அனுப்ப வேண்டும்.
இதன் பிறகு உங்களுக்கு கேஸ் சிலிண்டர் எப்போது டெலிவரி செய்யப்படும் என்ற விவரங்கள் தெரிவிக்கப்படும்.