சரசரவென ஏறும் சுகர் லெவலை கட்டுப்படுத்த வேண்டுமா? ‘இந்த’ யோகாசனம் செய்து பாருங்கள்!
சர்க்கரை நோயை கட்டுபடுத்துவதற்கு பல மருத்துவ நிபுணர்கள் யோகாசனம் செய்யக்கூறி பரிந்துரைக்கின்றனர். தினசரி யோகா செய்தால், இரத்த அழுத்தம் ஆகியவை குறைய வாய்ப்புகள் இருக்கிறதாம். மேலும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் யோகாசனங்கள் உதவுகின்றனர். இதற்காக செய்ய வேண்டிய யோகாசனங்களின் லிஸ்ட், இதோ!
பசிச்சமொட்டாசனம்: கால்களை உங்களுக்கு முன்னால் நேராக நீட்டி உட்கார்ந்து கொள்ள வேண்டும். மூச்சை உள்ளிழுத்து உங்கள் கைகளை மேலே தூக்கவும். உங்கள் முதுகெலும்பு நேராக இருப்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். மூச்சை இழுத்து வெளிவிட்டு, உங்கள் இடுப்பிலிருந்து முன்னோக்கி உடலை வளைக்கவும். உங்கள் கைகள் மூலம் கால்விரல்களை தொட வேண்டும். உங்கள் முதுகை முடிந்தவரை நேராக வைத்திருக்க முயற்சிக்க வேண்டும். சில நிமிடங்கள் இதே நிலையில் மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டும்.
அதோ முக்கா ஸ்வானாசனம்: இதை செய்வதால் உடலில் பேலன்ஸ் அதிகரிக்கும். தரையில் கை வைத்து உங்கள் கைகளையும் கால் முட்டியையும் நேராக வைக்க வேண்டும். தலையை உள்ளிழுத்து மூச்சை இழித்து விட வேண்டும்.
பாலாசனா: முட்டி போட்டு, அதன் மேல் அமரவும். கைகளை முன் கொண்டு வந்து தலையை தரையில் படும்படி படுக்கவும். இப்படி செய்யும் போது மூச்சு பயிற்சியும் சேர்த்து செய்ய வேண்டும்.
தனுராசனா: தரையில், குப்புற படுக்க வேண்டும். பின்பு உங்கள் கால்களை பின்புறமாக தூக்கி, கைகளால் கால்களை தலைக்கு மேல் உயர்த்தி பிடிக்கவும். தலைக்கு மேல் உயர்த்த முடியவில்லை என்றால், கால்களை மட்டும் நன்றாக உயர்த்தி உங்கள் கைகளை நன்றாக பின்புறம் நீட்டி கால்களை பிடித்துக்கொள்ளலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது