IRCTC கணக்கை ஆன்லைனில் தொடங்க... எளிய வழிமுறை..!!
IRCTC கணக்கை எவ்வாறு உருவாக்குவது மிகவும் எளிது. சில நிமிடங்களில் கணக்கை தொடங்கி, ரயில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யலாம். இதற்கான செயல்முறையை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
IRCTC கணக்கை உருவாக்குவதன் மூலம் நீங்களே ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம். இதற்கு, முதலில் நீங்கள் இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ போர்ட்டலான irctc.co.in/nget/train-search என்ற வலைதளத்திற்கு செல்ல வேண்டும்.
இணையதளத்திற்குச் சென்ற பிறகு, நீங்கள் பல விருப்பங்களைக் காண்பீர்கள். அதில் மேலே தெரியும் 'பதிவு' விருப்பத்தை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும். இதற்குப் பிறகு, ஒரு படிவம் உங்கள் முன் தோன்றும். அதை நீங்கள் நிரப்ப வேண்டும்.
திரையில் தோன்றும் படிவத்தில் உங்கள் பெயர், மின்னஞ்சல் ஐடி, மொபைல் எண் போன்ற பிற தகவல்களை நிரப்ப வேண்டும். பின்னர் நீங்கள் ஒரு பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உருவாக்க வேண்டும். அதன் பிறகு, நீங்கள் மீண்டும் ஒரு முறை கடவுச்சொல்லை உள்ளிட்டு அதை உறுதிப்படுத்த வேண்டும்.
பின்னர் பாதுகாப்பு கேள்விகளை உள்ளிட்டு பதிலளிக்கவும். இப்போது பிறந்த தேதி, மின்னஞ்சல் ஐடி, மொபைல் எண் மற்றும் வீட்டு முகவரியுடன் ஆதார் எண் மற்றும் பாலினத்தை உள்ளிடவும்.
மேற்கண்ட செயல்முறையை முடித்த பிறகு, உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP வரும், அதை உள்ளிட்டு நீங்கள் உள்நுழைந்து உங்கள் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம்.
உங்கள் சொந்த IRCTC கணக்கை உருவாக்குவதன் மூலம் சில நிமிடங்களில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இது உங்கள் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்துகிறது.