ஸ்மார்ட்போன் தொலைந்துவிட்டால் உங்கள் போனில் உள்ள தகவல்களை நீக்குவது எப்படி?

Wed, 17 Feb 2021-1:19 pm,

அதுபோன்ற சூழ்நிலையை நீங்களும் எதிர்கொண்டால், உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து ஆன்லைனில் மூலம் அனைத்து தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்கள், ஆவணங்கள் போன்றவற்றை பாதுகாப்பாக நீக்கலாம். அது எப்படி என்று உங்களுக்கு தெரியவில்லை என்றால் இப்போது தெரிந்துக்கொள்வோம்.

உங்கள் தொலைபேசி தொலைந்து போவதற்கு அல்லது திருடப்படுவதற்கு முன்பே முன்னெச்சரிக்கையாக பிளே ஸ்டோருக்குச் சென்று உங்கள் தொலைபேசியில் Find My Device எனும் ஆப் ஐ இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். அந்த ஆப் இல் Login செய்து அதை ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள்.

இப்போது உங்கள் தொலைபேசி தொலைந்துவிட்டால், உங்கள் மடிக்கணினி அல்லது கணினியில் இணையத்தைத் திறந்து https://myaccount.google.com/find-your-phone அல்லது https://www.google.com/android/find? என்ற வலைத்தளத்திற்குச் செல்லுங்கள்.  அதில் இப்போது Login செய்ய  சொல்லிக்கேட்கும்.  

 

நீங்கள் பழைய தொலைந்த தொலைபேசியில் பயன்படுத்திய ஜிமெயிலின் Login ID யைப் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும். அதே நேரத்தில், உங்கள் திருடப்பட்ட தொலைபேசியிலும் இணையம் இருப்பது அவசியம். Login செய்த பிறகு, அங்கு நீங்கள் பயன்படுத்தும் சாதனங்களின் பட்டியலைக் காண்பீர்கள். இவற்றில், உங்கள் திருடப்பட்ட அல்லது இழந்த சாதனத்தையும் காண்பீர்கள்.

அதில் தொலைந்த சாதனத்தில் கிளிக் செய்த பிறகு, நீங்கள் Map க்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள், அங்கு உங்கள் திருடப்பட்ட சாதனத்தின் இருப்பிடம் எங்குள்ளது என்பதைக் காணலாம். இடது பக்கத்தில், சாதனத்தின் மாதிரியின் கீழ் ப்ளே சவுண்ட் (Play Sound), செக்யூர் டிவைஸ் (Secure Device) மற்றும் எரேஸ் டிவைஸ் (Erase Device) போன்ற விருப்பத்தையும் நீங்கள் காண்பீர்கள்.

முதல் விருப்பத்தில், நீங்கள் Play Sound விருப்பத்தைப் பெறுவீர்கள், தொலைபேசியும் அமைதியாக இருந்தால், அதில் ஒரு ring சத்தம் கேட்கும். அதே நேரத்தில், Secure Device என்ற மற்றொரு விருப்பம் இருக்கும், அங்கு நீங்கள் லாக் செய்து Google இலிருந்து வெளியேறலாம்.  மூன்றாவது விருப்பமாக, Erase Device என்ற விருப்பம் இருக்கும். இந்த அம்சத்தின் மூலம் தொலைந்த உங்கள் தொலைபேசியில் உள்ள தகவல்களை நீக்க முடியும். 

இந்த அம்சத்தைத் தேர்ந்தெடுத்த பிறகு, பயனருக்கு அவரது ஜிமெயில் ஐடியின் பாஸ்வேர்டு கேட்கப்படும். நீங்கள் பாஸ்வேர்டை உள்ளிட்டவுடன், திருடப்பட்ட தொலைபேசியின் தேவையான அனைத்து தகவல்களும் நீக்கப்படும். ஆனால் தொலைபேசியில் இணைய சேவை இயக்கப்பட்டிருந்தால் மட்டுமே இந்த வசதியைப் பயன்படுத்த முடியும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link