புயல், வெள்ளம் வந்தாலும் பிரச்சனையில்லை.... வீட்டுக் காப்பீடு இருந்தால் கவலையே இல்லை...!!!

Mon, 21 Sep 2020-1:59 pm,

வீட்டின் உரிமையாளர், வீட்டில் வாடகைக்கு இருப்பவர் என எவரும், அவர்களுக்கு ஏற வகையிலான காப்பீட்டை பெறலாம். வீட்டிற்கான காப்பீட்டில், வீட்டில் ஏற்படும் திருட்டு, பயங்கரவாத தாக்குதல், தீ விபத்து, பூகம்பம், புயல், வெள்ளம் அல்லது பிற காரணங்களால் வீட்டிற்கு ஏற்படும் பொருளாதார பாதிப்பிற்கான இழப்பீட்டு தொகையை வீட்டுக் காப்பீடு வழங்குகிறத்து.

வீட்டுக் காப்பீட்டில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று வீட்டின் அமைப்பு அதாவது கட்டிடம், மற்றொன்று வீட்டில் வைக்கப்பட்ட பொருட்கள். நீங்கள் ஒரு வாடகைக்கரார் என்றால், நீங்கள் வீட்டில் வைத்திருக்கும் பொருட்களுக்கான காப்பீட்டை எடுக்கலாம். உங்களுக்கு எந்த விதமான காப்பீடு ஏற்றது என்பதை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

 

நீங்கள் வீட்டுக் காப்பீட்டை எடுக்கும்போது, ​​அதில்  எது சேர்க்கப்பட்டுள்ளது, எது சேர்க்கப்படவில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள். சில காப்பீட்டு நிறுவனங்கள் இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்கின்றன, சில காப்பீட்டில், அது இருக்காது. எனவே, காப்பீட்டு விதிகளை நன்றாக அறிந்து கொண்டு காப்பிட்டை எடுக்கவும்.

புதிய வீட்டிற்கான காப்பீட்டு ப்ரீமியம் குறைவு.  வீடு பழையதாக இருந்தால் பிரீமியம் அதிகமாக இருக்கலாம். புதிய வீட்டை பொறுத்தவரை , உங்களுக்கு தள்ளுபடியும் கிடைக்கும். புவியியல் இருப்பிடமும் பிரீமியத்தில் முக்கிய காரணியாக இருக்கும். உங்கள் வீட்டிற்கு செக்யூரிட்டி கார்டு அல்லது கேமராக்கள் இருந்தால், அதற்கு ஏற்ற வகையில் காப்பீட்டு நிறுவனங்களும் உங்களுக்கு தள்ளுபடி வழங்கலாம்.

ஒரு துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையில், நீங்கள் க்ளைம் செய்யும் நிலை ஏற்பட்டால், முதலில் சேதக் கட்டுப்பாட்டை மனதில் கொள்ளுங்கள். சேதம் ஏற்பட்டதை புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கவும். க்ளைம் படிவத்தை கவனமாக புரிந்துகொண்டு நிரப்பவும். இழப்பு தொடர்பாக போடப்பட்ட  FIR நகலை எடுத்துக் கொள்ளவும். எந்தவொரு பொருளுக்கு நீங்கள் இழப்பீடு கோர முடியும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link