உங்கள் குழந்தை படிப்பில் ஆர்வம் காட்டவில்லையா? ’இதை’ செய்யுங்கள்-பிடித்து படிப்பர்

Wed, 10 Apr 2024-8:16 am,

பணம் படைத்தவரோ, ஏழ்மை நிலையில் இருப்பவரோ, அனைவருக்கும் கல்வி என்பது முக்கியமான தேவையாகும். அறிவை வளர்த்துக்கொள்ள மட்டுமன்றி நம்மை ஒரு புது மனிதராகவே கல்வியறிவு மாற்றிவிடும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து என்பது இல்லை. ஆனால், ஒரு சில குழந்தைகளுக்கு நாம் படிப்பின் மகத்துவத்தை பற்றி எவ்வளவு எடுத்துக்கூறினாலும் புரியாது. அவர்கள் படிப்பில் ஆர்வம் இன்றி இருப்பதற்கு கவனச்சிதறல் பெரிய காரணமாக இருக்கலாம். குறும்புத்தனம் செய்யும் குழந்தைகளை படிக்க வைப்பது எப்படி? இதொ டிப்ஸ்!

குழந்தைகளுக்கு படிப்பு பிடிக்காமல் போவது ஏன்? இதற்கு மூன்று காரணங்கள் பொதுவாக கூறப்படுகின்றன.  1.ஆர்வமின்மை: குழந்தைகளுக்கு அனைத்து பாடங்களும் பிடித்து விடும் என கூற முடியாது. சில பாடங்கள் போர் அடிப்பதால் அவர்களுக்கு ஆர்வம் இல்லாமல் இருக்கலாம்.  2.கவனச்சிதறல்: பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு வீட்டில் உள்ள சூழல் கவனச்சிதறலை ஏற்படுத்தலாம். 3.கவலை: சில குழந்தைகளுக்கு பள்ளியில் ஏற்படும் அனுபவங்களால் கவலை அல்லது மன அழுத்தம் ஏற்படலாம். இதனால் படிப்பை பார்த்தாலே பயமாக இருக்கலாம்.

நம்மை சுற்றி, முழுக்க முழுக்க டெக்னாலஜி சாதனங்கள் நிறைந்திருக்கின்றன. இதை வைத்து குழந்தைகளுக்கு புதிய கற்றல் முறையை சொல்லிக்கொடுக்கலாம். உதாரணத்திற்கு, உங்கள் குழந்தைக்கு கணக்கு பாடத்தில் விருப்பம் இல்லை என்றால், அதை விளையாட்டாக சொல்லிக்கொடுக்க முறைகளும், செயலிகளும் உள்ளன. இவற்றை உபயோகித்து கொள்ளலாம். 

குழந்தைகளுக்கு கவனச்சிதறலை கொடுக்கும் விஷயங்களை அவர்களிடம் இருந்து தள்ளியே வைக்கலாம். தொலைக்காட்சி, மொபைல் ஆகிய சாதனங்களும் இதில் அடங்கும். கொரோனாவிற்கு பிறகு இப்போது எந்த வீட்டுப்பாடம் என்றாலும் மொபைலிலேயே வந்து இறங்கி விடுகின்றன. அந்த கட்டாயத்தினால் மொபைல் அவர்கள் கையில் கொடுக்கப்பட்டாலும், கொடுத்த வேலையை தவிர் அவர்கள் வேறு எதையும் பார்க்காத வகையில் அவர்களை கண்காணிக்க வேண்டும். 

நன்கு வளர்ந்தவர்களுக்கே ஒரே இடத்தில் அமர வைத்து ஒரே வேலையை செய்ய சொன்னால் பிடிக்காது. அப்படியிருக்கையில், குழந்தைகள் எப்படி அதை விரும்புவர்? எனவே, படிப்பு நேரங்களில் அவ்வப்போது 5 நிமிட இடைவேளை விடுவது நல்லது. இதனால் அவர்களின் மூளையும் சுறுசுறுப்பாகி, இன்னும் நிறைய படிக்க ஆர்வம் ஏற்படும். 

குழந்தைகள் படிப்பதற்கென்று, ஒரு இடத்தை உருவாகி வைத்துக்கொள்ளுங்கள். அந்த இடம் அவர்களுக்கு பித்தாற்போல இருந்தால் கண்டிப்பாக ஆர்வத்துடன் அமர்ந்து படிப்பர். 

ஒரு நாளில், குறிப்பிட்ட நேரத்தில் படிக்க வேண்டும் என்றால், அந்த நேரத்தில் அவர்கள் படிக்க வேண்டும் என்ற நடைமுறையை கொண்டு வாருங்கள். இதை தொடர்ந்து செய்து வந்தால், ஒரு நாள் நீங்களே சொல்லாமல் கூட அவர்கள் படிக்க ஆரம்பித்து விடுவர். அவர்கள் படித்து முடித்தவுடன், அவர்கள் எடுத்த முயற்சிக்காக அவர்களுக்கு அன்பு பரிசை கொடுக்கலாம். அனால் அதையே வழக்கமாக்கி விட வேண்டாம். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link