Pregnant Women: பிரசவத்திற்கு பிறகு உடல் எடையை குறைக்க இந்த விஷயங்களை மட்டும் செய்யுங்க!
பிரசவத்திற்குப் பிறகு ஒரு பெண்ணின் உடல்நிலை மீண்டும் பழையதுபோல் இயல்பாக திரும்புவது மிகவும் சவாலான பணியாகும். எனவே எடையைக் குறைக்க உதவும் 5 உணவுகளைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்
வெந்நீர், நமது எடையை எளிதில் குறைக்கும் ஒரு இயற்கை வழி. பகலில் சூடான நீரை உட்கொள்வது நமது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது, இது உணவின் செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் எடையை கட்டுக்குள் வைக்கிறது.
ஓட்ஸில் கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. நமது எடையைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவும் ஓட்ஸ், பிரசவத்திற்குப் பிறகு காலை உணவாக உட்கொள்ள உகந்தது
பருப்பு வகைகளை உட்கொள்வது நமக்கும் குழந்தைகளுக்கும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளதால், சமச்சீரான உணவில் பருப்புகளும் அடங்கும். பருப்புகளை எந்த வகையில் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்
பாதாம் ஒரு சிறந்த உலர் பழமாகும், இது நமது எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மெக்னீசியம், இரும்பு, பொட்டாசியம், கால்சியம் போன்ற தனிமங்கள் பாதாமில் காணப்படுகின்றன. இது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது எடையை கட்டுப்படுத்துவதுடன், உடலுக்கு தேவையான சத்துக்களையும் கொடுக்கிறது
நமது உணவின் நிறத்தையும் சுவையையும் அதிகரிக்கும் மஞ்சள், நமது எடையையும் கட்டுப்படுத்தும். வைட்டமின் பி6, பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு போன்ற தனிமங்கள் கொண்ட மஞ்சளில் நமது எடையைக் கட்டுப்படுத்தும் தன்மைகள் உள்ளதால், பிரசவித்த பெண்கள் மஞ்சளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்
இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.