Income Tax: முதலீடு செய்யாமலேயே வருமான வரியை சேமிக்க ‘சில’ எளிய டிப்ஸ்!
வருமான வரிச் சட்டத்தின் 10(13A) பிரிவின் கீழ் நீங்கள் வீட்டு வாடகை கொடுப்பனவான HRA தொகைக்கு வரி விலக்கு கோரலாம். நீங்கள் சம்பளம் பெறும் பணியாளராக இருந்து, வாடகை வீட்டில் வசிப்பவராக இருந்தால், இதன் கீழ் விலக்கு பெறலாம். நீங்கள் விலக்கு கோரக்கூடிய தொகை உங்கள் சம்பளம் மற்றும் நீங்கள் செலுத்தும் வாடகையை வைத்து தீர்மானிக்கப்படுகிறது.
லீவ் டிராவல் அலவன்ஸை (LTA) இந்தியாவிற்குள் பயணம் செய்ய பயன்படுத்தினால், இந்தத் தொகைக்கு வரி விலக்கு பெறலாம். இந்த விலக்கு நான்கு ஆண்டுகளில் இரண்டு முறை கிடைக்கும். எனவே, உங்கள் பயணத்தை சரியாக திட்டமிட்டால், உங்கள் LTA மீது வரியைச் சேமிக்கலாம்.
வருமான வரிச் சட்டத்தின் 80ஜி பிரிவின் கீழ், குறிப்பிட்ட நிதிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நன்கொடைகள் வரி விலக்குக்கு தகுதியுடையவை. தகுதியான தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளிப்பதன் மூலம், உங்கள் வரி விதிக்கக்கூடிய வருமானத்தைக் குறைத்து, உங்கள் வரிகளைச் சேமிக்கலாம்.
வருமான வரியின் 80D பிரிவின் கீழ், உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் ஏற்படும் மருத்துவச் செலவுகளுக்கு வரி விலக்கு கோரலாம். நீங்கள் கோரக்கூடிய விலக்கு அளவு உங்கள் வயது மற்றும் நீங்கள் வைத்திருக்கும் சுகாதார காப்பீட்டு பாலிசியின் வகையைப் பொறுத்தது. உங்கள் மருத்துவச் செலவுகளுக்கான பில்கள் மற்றும் ஆதாரங்களை வைத்திருப்பதன் மூலம், நீங்கள் விலக்குகளைப் பெறலாம்.
வருமான வரிச் சட்டத்தின் 80இ பிரிவின் கீழ் இந்த விலக்கு கிடைக்கிறது. உங்களுக்கோ, உங்கள் மனைவிக்கோ அல்லது உங்கள் குழந்தைகளுக்கோ கல்விக் கடன் வாங்கியிருந்தால், திருப்பிச் செலுத்தத் தொடங்கிய நாளிலிருந்து அதிகபட்சம் எட்டு ஆண்டுகள் வரை விலக்கு கோரலாம். இந்த விலக்கு பெறுவதன் மூலம், நீங்கள் வரியைச் சேமிக்கலாம்.
முதலீடு செய்யாமல் உங்கள் வரியைச் சேமிக்கும் சில வழிகள் தான் மேலே குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த விலக்குகளைப் பெறுவதன் மூலம், உங்கள் வரிப் பொறுப்பைக் குறைத்து, அதிக பணத்தைச் சேமிக்கலாம். வரிகளை தாக்கல் செய்யும் போது எப்பொழுதும் முறையான பதிவேடுகளை பராமரித்து நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும்.