ஜூலையில் புதனின் மாற்றத்தால் இந்த ராசிகளுக்கு செல்வம் பெருகும், அதிர்ஷ்டம் அதிகரிக்கும்
புதன் ஜூலை 2 ஆம் தேதி காலை 09:52 மணிக்கு இந்த மாதத்தில் முதல் முறை தனது ராசியை மாற்றினார். இந்த நேரத்தில் புதன் மிதுன ராசியில் அமர்ந்துள்ளார். ஜூலை மாதம் இரண்டாவது ராசி மாற்றம் ஜூலை 17 அன்று நடக்கும். இது ஜூலை 17 ஆம் தேதி நள்ளிரவு 12.01 மணிக்கு நடக்கும். ஜூலை 17ல் புதன் கடக ராசிக்குள் நுழைவார். இதன்பிறகு ஜூலை 31-ம் தேதி புதன் மிண்டும் ராசி மாறுவார். இந்த நேரத்தில் புதன் கடகத்தை விட்டு சிம்ம ராசியில் பிரவேசிப்பார். புதனின் ராசி மாற்றத்தால் நல்ல பலன்களை பெறப்போகும் ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
புதனின் மாற்றம் சிம்ம ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் வருமானம் கூடும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கலாம். குடும்பத்திலும் சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் பொங்கும்.
கன்னி ராசிக்காரர்களின் வாழ்வில் புதன் கிரகம் மகிழ்ச்சியைக் கொண்டு வரும். இந்த காலகட்டத்தில் வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகளும் வரலாம். வியாபாரிகள் லாபம் அடைவார்கள். இது முதலீட்டிற்கு நல்ல நேரமாக இருக்கும்.
மகர ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பணி செய்யும் பாணி பாராட்டப்படும். மதிப்பும் மரியாதையும் கூடும். வணிகத்தில் ஈடுபட்டுள்ள மகர ராசிக்காரர்களுக்கு இது லாபகரமான நேரமாக இருக்கும். செய்யும் தொழிலில் விருத்தி ஏற்படும். பல புதிய ஒப்பந்தங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். இது முதலீட்டிற்கு நல்ல நேரமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)