Hyundai: ஹூண்டாய் ஸ்டார்கேசர் கார் விரைவில் அறிமுகமாகிறது: SUVகளுக்கு செம போட்டி
உலக சந்தையில் ஹூண்டாய் நிறுவனம் புதிய MPV மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய எம்பிவி, சுஸுகி எர்டிகா போன்ற வாகனங்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தோனேசியா சந்தையில் அறிமுகம் செய்யப்படும் இந்த கார், இந்தியாவிலும்அறிமுகம் செய்யப்பலாம். கியா கேரன்ஸ் காருக்கு கிடைத்த வரவேற்பால் இந்தியாவில் ஸ்டார்கேசர் அறிமுகப்படுத்தப்படலாம் என்று நம்புவதற்கு காரணமாக இருக்கிறது.
ஹூண்டாய் மோட்டார்ஸ் ஹூண்டாய் ஸ்டார்கேசர் நிச்சயமாக ஒரு பல்நோக்கு வாகனமாக (எம்பிவி) இருக்கும். நீளமான டெயில்கேட் இதை உறுதிப்படுத்துகிறது.
Hyundai Stargazer MPV "ஸ்லீக் ஒன் பாக்ஸ்" கான்செப்ட் டிசைனுடன் வரும். இது வளைவான வடிவமைப்புடன் வருகிறது. காருக்கு ஏரோடைனமிக் தோற்றத்தை கொடுத்திருக்கும் ஹூண்டாய், காரின் உட்புறம் விசாலமானதாக இருக்கும் என்று கூறுகிறது.
உலக சந்தையில் ஹூண்டாய் நிறுவனம் புதிய MPV மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய எம்பிவி, சுஸுகி எர்டிகா போன்ற வாகனங்களை எதிர்கொள்ளும்.
புதிய எஸ்யூவியின் அதிகாரப்பூர்வ அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும். ஹூண்டாய் டீஸர் வெளியிட்டு இருப்பதன் அடிப்படையில் பார்த்தால் Carens, Maruti Suzuki Ertiga மற்றும் Maruti Suzuki XL6 ஆகியவற்றுக்கு போட்டியாக வரலாம்.