ஐஸ்கட்டிகளில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா? இது தெரியாம போச்சே!
துணிகள் சுருக்கமாக இருந்தால் அதனை ட்ரையரில் போடும்போது அதனுடன் சிறிது ஐஸ்கட்டிகளை சேர்த்து போட வேண்டும். இப்படி செய்தால் உங்கள் துணிகளில் சுருக்கமின்றி இருக்கும்.
உங்கள் உடையிலோ, தலைமுடியிலோ, செருப்பிலோ அல்லது உடம்பிலோ பபுள் கம் போன்ற ஏதேனும் பொருள் ஒட்டிக்கொண்டால் அந்த இடத்தில ஐஸ்கட்டியை வைத்து தேய்த்தால் எளிதில் அவற்றை போக்கிவிடலாம்.
ஏதேனும் காயம் அல்லது ரத்தக்கட்டு ஏற்பட்டால் அந்த இடத்தில ஐஸ்கட்டியை வைத்து தேய்ப்பதால் காயத்தை சரிசெய்யலாம்.
ஏதேனும் அலர்ஜியினாலோ அல்லது அழுததினாலோ உங்கள் கண்கள் வீங்கியிருந்தால் கண்களின் மீது ஐஸ்கட்டிகளை வைக்க கண் வீக்கம் குறையும்.