ஏசி, டிவி, பிரிட்ஜ் வாங்கபோறீங்களா, உடனே வாங்குங்க.. இல்லைன்னா... !!!
எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை தயாரிப்பதில் தாமிரம், துத்தநாகம், அலுமினியம், எஃகு, பிளாஸ்டிக் ஆகியவை அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இந்த உலோகங்களை கடல் வழியாக கொண்டு வருவதற்கான சரக்கு கட்டணம் 40-50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. எனவே, எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் விலை 15-40% அதிகரிக்கும்.
உலகளவில் டிவி பேனல்கள் பற்றாக்குறை காரணமாக, அதன் விலைகள் 30-100 சதவீதம் அதிகரித்துள்ளன, இது விரைவில் இந்திய சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. டிவி விலைகளும் அளவிற்கு ஏற்ப 7-20% அதிகரிக்கும். பல ஆண்டுகளில் முதல் முறையாக, விலைகள் இவ்வளவு அதிகரிக்கும்.
குளிர்சாதன பெட்டி விலை 12-15% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோத்ரேஜ் அப்ளையன்ஸ் நிறுவனத்தின் வணிகத் தலைவர் கமல் நந்தி கூறுகையில், "அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளன. பண்டிகை காலத்தில், நுகர்வோருக்கு சுமையை கொடுக்கவில்லை. இப்போது, நிறுவனங்கள் இப்போது அதிகரித்த விலை சுமையை நுகர்வோர் மீது சுமத்துவதை தவிர வேறு வழியில்லை. இதன் மாதம் முடிவில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில், விலைகள் அதிகரிக்கத் தொடங்கும் " என்றார்.
ஏசியின் விலை 8-10% அதிகரிக்கக்கூடும் என தொழில் துறையினர் கூறியுள்ளனர்.
பண்டிகை காலம் காரணமாக நிறுவனங்கள் செப்டம்பர் மாதத்தில் விலைகளை உயர்த்தவில்லை. தற்போது வாஷிங் மெஷின் விலை 8-10% அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது.