ஏடிஎம் கார்டு தொலைந்து போய்விட்டதா... புதுசு வாங்க எவ்வளவு கட்டணம் ஆகும் தெரியுமா?
ஏடிஎம் கார்டை எங்காவது தொலைத்துவிடுவது இயல்பானதுதான். இது பலருக்கும் அடிக்கடி நடக்கும். சில சமயங்களில் தேடினால் கொஞ்ச நாள் கழித்துக் கூட கிடைத்துவிடும். சில நேரங்களில் கிடைக்கவே கிடைக்காது.
அப்படி உங்களின் ஏடிஎம் கார்டும் எங்கோ தொலைந்துவிட்டு கிடைக்கவே கிடைக்கவில்லை என்றால் அதனை உடனடியாக உங்களின் வங்கிக்கு தெரிவித்து அதன் செயல்பாட்டை முடக்கிவிடுங்கள். இதனால் யாரும் அதனை தவறாக பயன்படுத்த இயலாது.
தொடர்ந்து, புதிய ஏடிஎம் கார்டு வேண்டுமென்றால் வங்கியில் நேரிலோ, ஆன்லைனிலோ விண்ணப்பித்து அதனை பெறலாம். அந்த வகையில், புதிய ஏடிஎம் கார்டுகளை வாங்க இந்த 5 முக்கிய வங்கிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் குறித்து இங்கு காணலாம்.
பஞ்சாப் நேஷ்னல் வங்கி (Punjab Nationl Bank): உங்கள் கணக்கு இந்த வங்கியில் இருந்து உங்கள் கார்டு தொலைந்துவிட்டால் புதிய கார்டு வாங்க ரூ.150 முதல் ரூ.500 வரை ஆகும். அது நீங்கள் பெறும் டெபிட் கார்டை பொறுத்தது. மேலும் இதில் கூடுதலாக 18% ஜிஎஸ்டியும் பிடித்தம் செய்யப்படும்.
கனரா வங்கி (Canara Bank): இந்த வங்கியில் கணக்கு இருந்து உங்களின் டெபிட் கார்டு தொலைந்துவிட்டால், புதிய கார்ட் வாங்க ரூ.150 ஆகும். கூடுதலாக 18% ஜிஎஸ்டியும் பிடித்தம் செய்யப்படும்.
ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank): இந்த வங்கியில் உங்களின் தொலைந்துபோன டெபிட் கார்டுக்கான புதிய கார்டை பெற ரூ.200 செலவாகும். இதற்கு 18% ஜிஎஸ்டி பிடித்தம் செய்யப்படும்.
ஹெச்டிஎப்சி வங்கி (HDFC Bank): இந்த வங்கியில் தொலைந்துபோன ஏடிஎம் கார்டுக்கு பதிலாக புதிய கார்ட் வாங்க 200 ரூபாய் மற்றும் 18% ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.
பாரத ஸ்டேட் வங்கி (State Bank Of India): இந்த வங்கியில் தொலைந்துபோன ஏடிஎம் கார்டை வாங்க ரூ.300 மற்றும் 18% செலுத்த வேண்டும்.