இன்னும் 4 நாட்களில் சனி நட்சத்திர பெயர்ச்சி: சக்கைப்போடு போடவுள்ள ராசிகள் இவைதான்
ஜோதிட சாஸ்திரத்தில் சனி பகவான் மிக முக்கியமான கிராமமாக பார்க்கப்படுகிறார். ஒரே ராசியில் சனிபகவான் அதிக நாட்களுக்கு இருப்பதால் அவரது தாக்கமும் ராசிகளில் அதிகமாக இருக்கின்றது.
ஏப்ரல் ஆறாம் தேதி சனிபகவான் தனது நட்சத்திரத்தை மாற்ற உள்ளார். தற்போது சனிபகவான் சதய நட்சத்திரத்தில் உள்ளார். ஏப்ரல் மாதம் அவர் பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சியாக உள்ளார். தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் இருக்கும் சனி பகவான் இந்த ராசியிலேயே நட்சத்திர பெயர்ச்சி அடைகிறார்.
சனி நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும். இவர்கள் வெற்றியின் உச்சம் தொடுவார்கள். இவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி மழையாய் பொழியும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இங்கே காணலாம்.
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு குருவின் நட்சத்திரத்தில் சனி நுழைவதால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். முதலீட்டில் லாபம் உண்டாகும். தடைபட்ட பணிகள் அனைத்து இப்போது முடிவடையும்.
ரிஷபம்: பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவானின் பெயர்ச்சி, பணி இடத்தில் சாதகமான பலன்களை அளிக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நீண்ட தூரப் பயணம் செல்ல வாய்ப்புகள் உண்டாகும். இந்த பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் உறவு மேம்படும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும்.
தனுசு: சனியின் ராசி மாற்றம் தனுசு ராசிக்கு சுப பலன்களை அளிக்கும். வாழ்வில் இருந்த அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வரும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பண வரவு அதிகமாகும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வெற்றி பெறுவார்கள். பணி இடத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும்.
மகரம்: சனியின் நட்சத்திர மாற்றத்தால் பொருளாதார ரீதியாக பலன் அடைவீர்கள். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் இப்போது கிடைக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். பணியில் இருந்து வந்த தடைகள் நீங்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்
கும்பம்: சனியின் நட்சத்திர மாற்றத்தால் இதுவரை இருந்து வந்த நிதிப் பிரச்சனைகள் தீரும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.
மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சி சிறப்பான பலன்களை அளிக்கும். நீங்கள் செய்யும் அனைத்து செயல்களிலும் வெற்றி காண்பீர்கள். வேலை, வியாபாரம், குடும்ப வாழ்க்கை என அனைத்திலும் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.