காதலியை வியக்க வைக்க மார்கெட்டில் இருக்கும் டாப் டெக் கிஃப்டுகள்
கேலக்ஸி வாட்ச் 4:
மகளிர் தினத்தில் கேலக்ஸி வாட்ச் 4 -ஐ விட சிறந்த பரிசு வேறு என்ன இருக்க முடியும். உடல் சார்ந்த விஷயங்களின் அப்டேட்டுகளை இந்த வாட்ச் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
Fujifilm Instax Mini 9 கேமரா:
Fujifilm Instax Mini 9 கேமரா மூலம் 35-50 சென்டிமீட்டர் தொலைவில் உள்ள க்ளோஸ்-அப் லென்ஸைப் பயன்படுத்தி சூப்பராக புகைப்படம் எடுக்கலாம். இந்த கேமராவில் இருக்கும் விஷேசம் என்னவென்றால், சுற்றுப்புறத்துக்கு ஏற்ப கலர் அட்ஜஸ்ட் செய்து கொள்ளும்.
பியூட்டி ஃப்ரிட்ஜ் கூலர் மற்றும் வார்மர்:
பெண்கள் என்றாலே அழகு சாதனப் பொருட்களை வைத்திருப்பார்கள். அவர்களின் அழகு சாதனப் பொருட்கள் நீண்ட நாட்கள் வைத்துக் கொள்ளும் வகையில் ஃப்ரிட்ஜ் கூலர் மற்றும் வார்மர் ஒன்றை வாங்கி பரிசளிக்கலாம். சின்னதாக இருக்கும் என்பதால், எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம்.
ஆப்பிள் ஏர்போட்ஸ் ப்ரோ:
மகளிர் தினத்தில் உங்கள் காதலியை வியக்க வைக்க விரும்பினால் Apple Airpods Pro-வை பரிசளிக்கலாம். இந்த ஏர்போட்ஸ்களில் உங்களின் அன்புக்குரியவர்களின் முதல் எழுத்துகளை பொறித்துக் கொடுக்கலாம்.