இந்தியாவில் குகைகளில் டன் கணக்காக சேமிக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய்: In Pics

Thu, 15 Oct 2020-10:52 am,

அவசரகாலத்தில் எண்ணெய் இல்லாத நிலையில் அதை சேமித்து வைப்பதும் முக்கியம். இந்தியாவின் மொத்த தேவையை, ஒன்பதைரை நாட்கள் பூர்த்தி செய்யும் அளவில், எண்ணெய் சேமிக்கபட்டுள்ளன.(Image- isprlindia.com)

கொரோனா சமயத்தில் கச்சா எண்ணெய் விலைகள் திடீரென குறைந்தது, அதை இந்திய அரசு சரியாக பயன்படுத்திக் கொண்டு கச்சா எண்ணெய் அதிக அளவில் வாங்கியது.(Image- isprlindia.com)

இந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து வருவதைப் பயன்படுத்தி, அரசாங்கம் 16.7 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை சேமித்து வைத்திருந்தது. இந்த எண்ணெய் பீப்பாய்க்கு சராசரியாக $ 19 என்ற விலையில் வாங்கியுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம், கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 60 டாலர் என இருந்தது. அதை ஒப்பிடும் போது மிக குறைந்த விலையில் வாங்கி குவித்துள்ளது.(Image- isprlindia.com)

அரசாங்கம் கச்சா எண்ணெய் வாங்கி மூன்று பெரிய குகைகளில் இதனை சேமித்து வைத்த்துள்ள்அது. இந்த வாங்கியதம் மூலம்  அரசாங்கம் 68.51 கோடி டாலர் அதாவது 5,069 கோடி ரூபாய் சேமித்தது.(Image- isprlindia.com)

 

மத்திய அரசு நாட்டில் எண்ணெயை சேமித்து வைப்பது மட்டுமல்லாமல், எண்ணெயை சேமிக்க பல நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. எண்ணெய் சேமிக்க அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்துடன் அரசாங்கம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில், எந்தவொரு அவசர காலத்திலும் அதன் சேமிப்பில் உள்ள கச்சா எண்ணெயைப் பயன்படுத்துவதற்கான முதல் உரிமை இந்தியாவுக்கு இருக்கும்.(Image- isprlindia.com)

எண்ணெயைச் சேமிப்பதற்காக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலத்த்திற்கு அடியில் பெரிய குகைகள் உள்ளன. நாட்டில் அவசர நேரத்திற்காக மூன்று இடங்களில் நீருக்கடியில் எண்ணெய் சேமிப்பு வசதி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு எண்ணெயை சேமிக்க மற்ற நாடுகளுக்கும் வாடகைக்கு விடுகிறது. (Image- isprlindia.com)

இந்திய மூலோபாய பெட்ரோலிய ரிசர்வ் லிமிடெட் (ISPRL) கர்நாடகாவின் மங்களூரு மற்றும் பதூர் மற்றும் ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் மூன்று நிலத்தடி சேமிப்பு வசதிகளை உருவாக்கியுள்ளது. எண்ணெய் சப்ளை மற்றும் தேவை இடயே பெரும் வேறுபாடு இருக்கும் நேரத்தில் விலைகளை சீராக வைத்திருக்க அவை தயாராக உள்ளன. விசாகப்பட்டினம் சேமிப்பு கிடங்கு 13 லட்சம் டன் கொள்ளளவு கொண்டது.(Image- isprlindia.com)

கர்நாடகாவில் மங்களூரின் நிலத்தடி சேமிப்பு வசதி 15 லட்சம் டன் சேமிப்பு திறன் கொண்டது. அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம், ஏற்கனவே அதன் எண்ணெயை சேமித்து வைப்பதற்காக, இந்த சேமிப்பு கிடங்கை வாடகைக்கு எடுத்திருந்தது. மீதமுள்ள பாதியையும் ஏப்ரல்-மே மாதங்களில் வாடகைக்கு எடுத்தது.(Image- isprlindia.com)

 

கர்நாடகாவில் உள்ள பதூர் சேமிப்பு கிடங்கு அதிக சேமிப்பு திறன் உள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 25 லட்சம் டன். நவம்பர் 2018 இல், அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் அதன் திறனில் பாதியை வாடகைக்கு எடுக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, ஆனால் அந்நாடு இங்கு எண்ணெயை இங்கு சேமிக்கவில்லை. (Image- isprlindia.com)

இந்த மூன்று சேமிப்பு கிடங்குகளை தவிர, ஒடிசாவின் ஒடிசாவின் சண்டிகோல் என்ற இடத்தில் ஒரு பெரிய குகை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த குகை அதிகபட்சமாக 40 லட்சம் டன் சேமிப்பு திறன் கொண்டது.(Image- isprlindia.com)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link