Train Fare: பயணிகள் ரயில் கட்டணத்தை 50 சதவீதம் வரை குறைக்கும் இந்திய ரயில்வே!
இந்திய ரயில்வே பயணிகளின் ரயில் டிக்கெட் கட்டணத்தை குறைக்க முடிவு செய்துள்ளது: கோவிட் நேரத்தில் ரயில் டிக்கெட் விலையை உயர்த்திய இந்திய ரயில்வே, தற்போது கொரோனா பரவுவதற்கு முன்பு இருந்த கட்டணங்களையே வசூலிக்க முடிவு செய்துள்ளது
அரசின் முடிவு செயல்படுத்தப்பட்டால், பயணிகள் ரயில் கட்டணம் 50 சதவீதம் வரை குறையும்
கோவிட் பெருந்தொற்று காலத்தில் ரயில்களில் கூட்ட நெரிசலைக் குறைக்க பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. லாக்டவுன் முடிந்த பிறகு, பயணிகள் ரயில்களை வகைப்படுத்திய ரயில்வே, அதன் கட்டணத்தை எக்ஸ்பிரஸ் ரயில்களின் கட்டணத்துடன் இணைத்தது.
இதனால், வழக்கமான ரயில்களுக்கான கட்டணமும், எக்ஸ்பிரஸ் ரயில்களின் கட்டணமும் ஒன்றாகின. வழக்கமாக பயணிகள் ரயில் கட்டணத்திற்கும், எக்ஸ்பிரஸ் ரயில் கட்டணத்திற்கும் வேறுபாடு இருக்கும்
அரசின் இந்த முடிவு, தினசரி பயணம் செய்யும் பயணிகளுக்கு பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தின
பூஜ்ஜியத்தில் தொடங்கும் ரயில் எண்களைக் கொண்ட ரயில்களின் கட்டணம் 50% குறைந்தது. இதுமட்டுமல்ல, முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் அமைப்பு செயலியில் கட்டணங்கள் தொடர்பான கட்டுப்பாடுகளையும் ரயில்வே திருத்தி அமைத்துளது
இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்ட இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களுக்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது